சிம்பு, அனிருத் மீது துரித நடவடிக்கைக்கு தூத்துக்குடி கோர்ட் உத்தரவு- ஜனவரி 4க்குள் கைதாக வாய்ப்பு
தூத்துக்குடி: பீப் பாடல் சர்ச்சையில் நடிகர் சிம்பு, பாடகர் அனிருத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி போலீசாருக்கு அம்மாவட்ட கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பீப் பாடல் மூலம் சர்ச்சையில் சிக்கி உள்ளார் நடிகர் சிம்பு. இவருடன் இசையமைப்பாளர் அனிருத் மீதும் நடவடிக்கை கோரி பல்வேறு தரப்பிலிருந்து போராட்டங்கள் வெடித்தன.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் கோர்ட் அறிவுறுத்தல்படி, சர்ச்சைக்குரிய அந்தப் பாடலை வெளியிட்ட இணைய தளத்தை அணுகி அந்தப் பாடலை யூடியூப்பிலிருந்து நீக்கும்படி கோரிக்கை கடிதம் அனுப்பி வைத்தனர். ஆனால் யூடியூப் நிர்வாகம் அப்படிச் செய்ய வாய்ப்பில்லை என்று மறுத்து விட்டது.
இந்நிலையில், பீப் பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து சக்தி கனி என்ற வழக்கறிஞர் கடந்த 15 ஆம் தேதி தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்திலும், எஸ்.பி. அலுவலகத்திலும் சிம்பு மற்றும் அனிருத் ஆகியோருக்கு எதிராக புகார் அளித்தார். ஆனால், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லை.
இதையடுத்து, கடந்த 21 ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் சிம்பு மற்றும் அனிருத்துக்கு எதிராக நடவடிக்கை கோரி சக்தி கனி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோதே மேற்கூறிய உத்தரவை நீதிபதி காமராஜ் பிறப்பித்தார்.
மேலும் சிம்பு மற்றும் அனிருத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை மார்ச் 7 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். கோர்ட்டின் இந்த உத்தரவால் சிம்புவை, வருகிற ஜனவரி 4 ஆம் தேதி கோர்ட்டில் ஆஜராகும் முன்னரே கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications