அத்தனை அமைச்சர்களும் ஆர்.கே.நகரில்.. இது ஜனநாயக விரோத செயல்... சிபிஐ பாய்ச்சல்
திருச்செங்கோடு: தமிழக அமைச்சர்கள் அத்தனை பேரும், துறை சார்ந்த அதிகாரிகளும் ஆர்.கே.நகரில் முகாமிட்டுள்ளனர். இது ஜனநாயக விரோத செயலாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஆர்.கே.நகரில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஆர்.கே.நகரில் முகாமிட்டிருக்கிறார்கள்.

எந்தெந்த துறை அமைச்சர்களாக இருக்கிறார்களோ அந்த துறைகளை சார்ந்த அதிகாரிகளும் அங்கேதான் இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் இன்றைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
தலைமைச் செயலகத்தில் எந்த அமைச்சரும் இல்லை. எந்த அதிகாரிகளும் இல்லை. அவர்கள் அனைவரும் ஆர்.கே.நகரில் தேர்தல் பணியை ஆற்றுகிறார்கள். இதனால் அரசு நிர்வாகம் பாதிக்கும். இது ஒரு ஜனநாயக விரோதமான செயலாகும் என்றார் முத்தரசன்.
அதிமுக ஆட்சிக்காலத்தில், இடைத் தேர்தல் வரும்போதெல்லாம் தலைமைச் செயலகத்தில் எந்த அமைச்சரும் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்குக் காரணம் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பணியில் அத்தனை அமைச்சர்களையும் ஈடுபடுத்துவதால்தான். தற்போது ஜெயலலிதாவே போட்டியிடும் தொகுதியிலும் அமைச்சர்கள் குவிந்து ஓட்டு வேட்டையாடி வருவதால் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications