வர்தா புயலால் சென்னைக்கு கிடைத்த 38 செ.மீ மழை- தண்ணீர் பஞ்சத்தில் இருந்து தப்பியது
வர்தா புயலினால் சென்னை சோழிங்கநல்லூரில் 38 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயத்தில் இருந்து சென்னை தப்பியது.
சென்னை: வங்கக் கடலில் உருவான வர்தா புயல் சென்னையை கடந்த போது, மணிக்கு 150 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. அப்போது கனமழை கொட்டியது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான மரங்கள் அடியோடு சாய்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி சென்னை தனித்தீவாக காட்சியளித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிகபட்சமாக, சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில், 38 செமீ மழை பெய்துள்ளதான வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
வார்தா புயல் காரணமாக சென்னையில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சென்னை சத்யபாமா கல்லூரியில் அதிகபட்சமாக 38 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. காட்டுக்குப்பம் பகுதியில் 34 சென்டிமீட்டர் மழையும், காஞ்சிபுரம் பகுதியில் 28 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மழை பதிவான இடங்கள்:
சத்யபாமா பல்கலைக்கழகம் - 38 செ.மீ
காட்டுக்குப்பம் - 34 செ.மீ
காஞ்சிபுரம் - 28 செ.மீ
களவாய் - வேலூர் மாவட்டம் - 23 செ.மீ
பூந்தமல்லி - 22 செ.மீ
செம்பரம்பாக்கம் - 21 செ.மீ
ஏற்காடு - 15 செ.மீ
கிருஷ்ணகிரி மாவட்டம்- 11 செ.மீ
திருவண்ணாமலை செய்யாறு - 11 செ.மீ
மரக்காணம் - 7 செ.மீ
பாலக்கோடு - 4 செ.மீ
உதகமண்டலம் - 2 செ.மீ
கடலூர் ஸ்ரீமுஷ்ணம் - 1 செ.மீ
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு சரியாக பெய்யாத நிலையில் வர்தா புயலால் 38 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து சென்னை மாநகரம் தப்பியதால் பொதுமக்கள் சற்றே நிம்மதியடைந்துள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications