ஜெ.வின் விரோதிகளை தோற்கடியுங்கள்... தினகரனை குறித்து வைத்து தீபா தீவிரப் பிரச்சாரம்
ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதாவின் விரோதிகளை தோற்கடியுங்கள் என்று டிடிவி தினகரனை குறித்து வைத்து தீபா தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா போட்டியிடுகிறார்.
ஆர்.கே. நகர் தொகுதியில் தீபா, சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனை குறித்து வைத்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களை அடையாளம் கண்டு தோற்கடியுங்கள் என்று வாக்காளர்களிடம் கோரி வருகிறார்.

ஆர்.கே. நகர் தொகுதியில் திறந்தவெளி ஜீப்பில் நேரு நகர் பகுதியில் தீபா பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:
ஜெ. வார்த்தைகளின்படி
"மக்களால் நான் மக்களுக்காக நான்" என்ற ஜெயலலிதாவின் வார்த்தைகளின்படி செயல்படுவேன். ஆர்.கே.நகர் தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றுவேன். அவர் விட்டுச் சென்ற பணிகளை ஆற்றுவேன்.
நாகரிகமற்ற பேச்சு
என்னை அரசியல் தெரியாத குழந்தை என மதுசூதனன் கூறியிருக்கிறார். இது நாகரிகமற்ற பேச்சு. இதற்கெல்லாம் அஞ்சாமல் மக்கள் பணி ஆற்றுவேன்.
விரோதிகள்
அதிமுக யாருடைய கையிலும் சிக்கக் கூடாது என்று ஜெயலலிதா நினைத்தாரோ அவர்களே இன்று கட்சியை நடத்தி வருகின்றனர். சில காலம் அவர்களோடு இருந்தவர்களும் இன்று ஓட்டு கேட்டு இங்கு வருகிறார்கள். அவர்களின் உண்மை முகத்தை நான் வெளிப்படுத்துவேன்.
அம்மாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளியில் கொண்டு வருவேன். ஜெயலலிதாவின் விரோதிகளை அடையாளம் கண்டு அவர்களை தோற்கடித்து ஆர்.கே.நகரில் படகு சின்னத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தீபா கூறினார்.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications