பிரேமலதா விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த ஹைகோர்ட்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மீது அதிமுகவினர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

நாடாளுமன்ற தேர்தலின்போது திருப்பூர் தொகுதி தேமுதிக வேட்பாளரை ஆதரித்து கடந்த ஏப்ரல் 14-ந் தேதி பிரசாரம் செய்தேன். அப்போது கோபிச்செட்டிபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நான், ‘ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதியை வழங்காமல் அமைச்சரின் உறவினர்களுக்கும், அவருக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டேன்.
இது குறித்து கோபிச்செட்டிப்பாளையம் நகர அதிமுக செயலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோபிச்செட்டிப்பாளையம் போலீசார் என் மீதும், என் கட்சிக்காரர் கிருஷ்ணசாமி மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர், எங்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 504 (அவதூறாக பேசி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல்), 505(1)(பி) (வேண்டுமென்றே தவறாக சித்தரித்து பேசுதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் குற்றம் சுமத்தி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
இதனடிப்படையில் கோபிச்செட்டிப்பாளையம் குற்றவியல் நீதிமன்றம் என்னை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது. அரசியலமைப்பு சாசனத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட பேச்சுரிமையை பறிக்கும் விதமாக இந்த வழக்கு எங்கள் மீது தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக எனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.பி.கே.வாசுகி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது,
மனுதாரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கிறேன். வழக்கு விசாரணைக்கு மனுதாரர் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications