காயத்ரி அண்ணியாருக்கும் மந்திரா ஐபிஎஸ்க்கும் உள்ள ஒற்றுமையை கவனிச்சீங்களா?
தெய்வமகள் சீரியலில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் காயத்ரி இப்போது மந்திரா ஐபிஎஸ் ஆக வந்திருக்கிறார். ஆனால் இருவரின் உருவ ஒற்றுமையும் ஒரே மாதிரி இருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியல் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. அண்ணியார் காயத்ரி இல்லாத தெய்வமகளை பார்க்க மாட்டோம் என்று அவரது அடிவிழுதுகள் அடம் பிடிக்க, யோசித்து பார்த்த இயக்குநர் குமரன், அண்ணியார் போலவே ஒருவரை மந்திரா ஐபிஎஸ் ஆக கொண்டு வந்து விட்டார்.
தெய்வமகள் சீரியல் 1250 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஜெய்ஹிந்த் குடும்பத்து மூத்த மருமகள் காயத்ரியின் வில்லத்தனத்தை பார்க்கவே சீரியல் ரசிகர்கள் 8 மணிக்கு டிவி முன்பு ஆஜராகி விடுவார்கள்.
சொத்துக்காக கொழுந்தனின் மனைவி, கணவனை கொல்ல நினைத்த காயத்ரியை பிரகாஷ் கொன்று விடவே, கதை உப்பு சப்பில்லாமல் போனது.

அண்ணியார் எங்கே
காயத்ரியின் மரணத்தோடு சீரியல் முடிந்துவிடும் என்று பார்த்தால் கதை ஜவ்வு இழுப்பாக இழுத்தது. அண்ணியார் பேயாக வருவாரோ என்று பலரும் யோசிக்கத் தொடங்க கதையில் திடீர் திருப்பமாக காயத்ரியின் வருகை அமைந்துள்ளது.

நடுரோட்டில் சுட்ட அதிகாரி
அஞ்சலியை கொல்ல வந்த ரவுடிகளை நடிரோட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு அசால்டாக செல்ல போலீஸ், அவரை காயத்ரி என்று கைது செய்து கொண்டு போன பின்னர்தான் தெரிகிறது அது காயத்ரி அல்ல என்றும் ஐபிஎஸ் அதிகாரி என்று தெரிந்து மரியாதை கொடுக்கின்றனர்.

மந்திரா ஐபிஎஸ்
காயத்ரிதான் திரும்ப வந்து விட்டார் என்று பிரகாஷ், சத்யா உள்பட எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க வந்தது மந்திரா ஐபிஎஸ். அதுவும் காயத்ரி கொலையை கண்டுபிடிக்க வந்திருக்கும் ஐபிஎஸ் அதிகாரியாம்.

வினோதினிக்கு விழுந்த அறை
காயத்ரியின் தங்கை வினேதினியும் தனது அக்கா என்று நினைத்து காயத்ரியை கட்டி பிடிக்க கன்னத்தில் அறைந்து பிடித்து தள்ளுகிறார் மந்திரா ஐபிஎஸ். பிரகாஷ், சத்யாவிற்கு வந்திருப்பது காயத்ரிதான் என்ற சந்தேகம் இருந்தாலும் நடவடிக்கைகள் எல்லாம் சற்றே யோசிக்க வைக்கிறது.

இன்னும் எத்தனை நாளைக்கு?
பிரகாஷை மிரட்டும் மர்மகுரல் , கார், நகை, பணம் எல்லாம் கொடுத்து ஆட்டிவைக்கிறது. அது அமைச்சரின் வேலை என்று தெரியவருகிறது. அதே போல கொலையை கண்டுபிடிக்க வந்திருக்கும் மந்திரா ஐபிஎஸ் நிஜமாகவே யார் என் புதிருக்கும் விடை தெரியவில்லை.

ஜவ்விழுப்பு இழுக்கும் இயக்குநர்
காயத்ரி மரணத்தை வைத்தே இன்னும் 500 எபிசோடுகள் நகர்த்தி விடுவார்கள். அதற்குள் சத்யாவிற்கு குழந்தை பிறந்து விடுமா? அல்லது அதை வைத்து ஒரு 500 எபிசோடுகள் இழுப்பார்களா? என்று கேட்கின்றனர் சீரியல் ரசிகர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications