For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இப்படிப் பண்ணிட்டீங்களேய்யா.. திருவிழாவில் பூசாரி விபூதி பூசியதில்.. 300 பேருக்கு கண் பாதிப்பு!

கோவில் விழாவில் ரசாயனம் கலந்த விபூதி பூசியதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    விபூதியால் கண் பார்வை பாதிப்பு- வீடியோ

    தேனி: தேனியில் கோவில் கும்பாபிஷேகத்தில் ரசாயனம் கலந்த விபூதி பூசிய 300க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் உள்ளது மதுசவுடாம்பிகை அம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கத்தியை நெஞ்சில் அடித்துக் கொண்டு நேர்த்திக்கடன் செய்வது வழக்கம். அப்படி கத்தியால் அடிக்கும்போது எதுவும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பக்தர்கள் மீது விபூதி அடிக்கப்படுமாம்.

    Devotees eyes affects due to temple viputi in Theni

    அதன்படி, இந்த ஆண்டுக்கான கும்பாபிஷேகம் முடிந்து திருவிழா நேற்று நடைபெற்றது. அப்போது, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துபோது வழக்கம்போல் விபூதி தரப்பட்டது. மேலும் விழாவை காண வந்தவர்கள் மீதும் விபூதி தூவப்பட்டது. விழா முடிந்து அனைவரும் கலைந்து செல்லும் நிலையில் பக்தர்களுக்கு திடீரென்று கண்களில் எரிச்சல், வீக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் கண்கள் பாதிப்படைந்தவர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் அப்பகுதியிலுள்ள கண் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபூதிகளில் நறுமணம் கிடைப்பதற்காக ரசாயனம் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், அதனாலேயே கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    English summary
    Due to the Viputhi provided at Temple Festival near Theni, the devotees suddenly got irritated and swollen their eyes. Over 300 people have been admitted to eye hospitals in the area. The public has been accused of chemically mixed and cheated to get aroma in the larvae.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X