"காம நெருப்பு".. நெஞ்சே நடுங்குது.. வாசலில் அம்மா, சித்தி, பெரியம்மா..ச்சீ இவங்கெல்லாம் மனித பிறவியா
மதுரை: மதுரையில் நடந்த கொடுமையை பார்த்து, தமிழக மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.. நடந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 8 பேரை தட்டி தூக்கி உள்ளது மதுரை போலீஸ்.
அந்த சிறுமிக்கு 13 வயதுதான் ஆகிறது.. சம்பக்குளத்தை சேர்ந்தவர்.. இவரது அப்பா சில வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார்.. இதற்கு பிறகு, இந்த சிறுமியை வளர்க்க அவரது அம்மாவுக்கு ஆர்வம் இல்லை..
பராமரிப்பு: எனவே, மகளை கொண்டுபோய், செல்லூரில் உள்ள, தன்னுடைய பாட்டி வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டார். இதையடுத்து, அந்த சிறுமி, கொள்ளுப்பாட்டியின் பராமரிப்பிலேயே வளர்ந்து வருகிறார்.. அந்த பகுதியிலேயே ஒரு ஸ்கூலில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.. சமீபத்தில் கோடை விடுமுறை விடப்பட்டதால், சம்பக்குளத்தில் இருந்து கிளம்பி வந்த அவரது அம்மா, மகளை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறார்.

ஸ்கூல் லீவு என்பதால், மகளும் தன் அம்மாவுடன் ஊருக்கு வந்துள்ளார்.. அப்போதுதான், வருமானத்துக்காக, பெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ள முடிவெடுத்தார் அந்த பெண்.. இதனால், தினமும் சிறுமிக்கு நைட் நேரத்தில் பால் கொண்டுவந்து தருவாராம்.. அந்த பாலில், மகளுக்கு தெரியாமல் தூக்க மாத்திரைகளை கலந்து தந்ததாகவும் தெரிகிறது. சிறுமி தன்னை மறந்து தூங்கிவிட்ட நிலையில், சில காமுகர்களை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்..
அந்த மிருகங்களும், 13 வயது குழந்தை என்றும் பாராமல் பலாத்காரம் செய்துள்ளனர்... சிலசமயம், சிறுமிக்கு, தூக்கத்தில் இருந்து லேசாக விழிப்பு வந்துள்ளது.. அப்போது காம பிண்டங்கள் அங்கிருப்பதை பார்த்து அதிர்ந்துள்ளார்.. உடனே கத்தி கூச்சல் போட்டுவிடக்கூடாது என்பதற்காக, சிறுமியின் உடலிலும் சிகரெட் சூடு வைத்ததாகவும் சொல்கிறார்கள்..
மாத்திரைகள்: அதுமட்டுமல்ல, மகள் கருவுறாமல் இருப்பதற்காக, அதற்கான மாத்திரைகளையும் பெற்ற தாயே தந்து வந்துள்ளார்.. நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமையால் அளவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்ட சிறுமி, தன் அம்மா வீட்டில் இருந்து, பாட்டி வீட்டுக்கு தப்பி வந்துசேர்ந்தார். அப்போதுதான், பாட்டியிடம் எல்லா கொடுமையையும் சொல்லி கதறி அழுதுள்ளார்..
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாட்டி, போலீசுக்கு போக நினைத்தார்.. ஆனால் அதற்குள் இந்த விஷயம் தெரிந்த, விபச்சார கும்பலை சேர்ந்த புவனேஷ் என்பவன், பாட்டியை மிரட்டியுள்ளான்.. போலீசுக்கு போனால், சிறுமி மீது ஆசிட்வீசி கொன்றுவிடுவதாகவும், சிறுமியின் ஆபாச வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளான்..
துணிச்சல் பாட்டி: ஆனாலும், துணிச்சல் நிறைந்த அந்த பாட்டி, தல்லாகுளம் போலீசுக்கு போய் புகார் செய்தார். இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார் வழக்கு பதிவு செய்து உடனடியாக விசாரணையையும் நடத்தினார்கள்.. 13 வயது சிறுமியை விபசாரத்தில் தள்ளியதும், சித்ரவதை செய்ததும் உண்மைதான் என்பது நிரூபணமானது.
இதில் கொடுமை என்னவென்றால், அந்த சிறுமியை விபச்சாரத்தில் தள்ளியது பெற்ற தாய் மட்டும் கிடையாது.. சித்தி, பெரியம்மா, என மொத்தம் 8 பேர் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அம்மா, சித்தி, பெரியப்பா, மற்றும் சிறுமியியை பாலியல் பலாத்காரம் செய்த அருண், புவனேஷ், சேகர், மணிகண்டன் உள்பட 8 பேரை கைது செய்தனர்..
கொடுமை: இன்னும் இந்த பலாத்காரம் நிறைய பேருக்கு தொடர்பு இருக்கிறது என்கிறார்கள்.. அதனால், அவர்களை எல்லாம் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்..இப்போது அந்த சிறுமிக்கு உடல் நலம் மிகவும் மோசமாக இருக்கிறதாம்.. இதனால், பாதிக்கப்பட்டிருந்த சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்... தீவிரமான சிகிச்சையும் அந்த குழந்தைக்கு நடந்து கொண்டிருக்கிறது..!!












Click it and Unblock the Notifications