சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடவேண்டும்... தினேஷ் கார்த்திக் விருப்பம்
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆட வேண்டும் என்று விரும்புவதாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
சென்னை: அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்து, சொந்த மாநில அணிக்காக ஆடவேண்டும் என்று தெரிவித்துள்ளார் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்.
கடந்த 2008ம் ஆண்டு முதல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடியவர் தினேஷ் கார்த்திக். வலது கை பேட்ஸ்மேன். சிறப்பான ஆட்டங்களைப் பலமுறை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான தடை விதிப்பால் அந்த அணியில் தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு இடம் பெற முடியவில்லை. அதனால் 2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் சொந்த மாநில அணிக்காக தினேஷ் கார்த்திக் விளையாட வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இது பற்றிக் கூறிய அவர், " சொந்த ஊர் அணிக்காக அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஆடவேண்டும். அதுதான் என்னுடைய கனவு. அடுத்த ஆண்டு அதற்காக நடக்கவிருக்கும் ஏலத்தில் என்னைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
டிஎன்பிஎல் போட்டிகள் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். அப்போதுதான் தமிழக வீரர்கள் நிறையப் பேர் உலக அளவில் கிரிக்கெட் பிரபலங்களாக வளம் வரமுடியும்.
இந்த முறை நடக்கும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 4 முறை வென்று அதிரடி காட்டியுள்ளது. இது பாராட்டுக்குரியது. இளம் வீரர்களுக்கு டிஎன்பிஎல் போட்டிகள் அவர்களின் கிரிக்கெட் கேரியருக்கு மிகவும் உதவிக்கரமாக இருக்கும்." என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications