அடக் கொடுமையே.. இதுக்காகவா ஜெ. மரணத்தை தாமதமாக அறிவித்தார்கள்.. திகில் கிளப்பிய திவாகரன்

ஜெயலலிதா மரணத்தை ஒரு நாள் தாமதமாக அப்பல்லோ அறிவித்ததற்கு அதன் பாதுகாப்பே காரணம் என்று நிர்வாகம் கூறியதாக திவாகரன் தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஜெ. மரணம் திவாகரனின் திடுக் தகவல்

    மன்னார்குடி: ஜெயலலிதா டிசம்பர் 4-ஆம் தேதியே இறந்துவிட்டார் என்றும் அவரது இறப்பை ஏன் தாமதமாக அறிவிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று கேட்டு கொண்டதாகவும் திவாகரன் தெரிவித்தார்.

    ஜெயலலிதா கடந்தச 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல்நல பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் டிசம்பர் 4-ஆம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதி இறந்துவிட்டதாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது. இந்த மரணத்தில் மர்மம் இருப்பதால் தமிழக அரசு சார்பில் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    திவாகரன் பங்கேற்பு

    திவாகரன் பங்கேற்பு

    இந்நிலையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கலந்து கொண்டார்.

    அப்பல்லோ அறிவிக்கவில்லை

    அப்பல்லோ அறிவிக்கவில்லை

    அப்போது அவர் பேசுகையில் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே இறந்துவிட்டார். ஆனால் அவரது மரண அறிவிப்பை மறுநாள் டிசம்பர் 5-ஆம் தேதிதான் அறிவிக்க வேண்டும் என்று அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்தது.

    கிளைகள் ஏராளமாக உள்ளன

    கிளைகள் ஏராளமாக உள்ளன

    இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுகுறித்து நான் கேட்ட போது தமிழகத்தில் எங்கள் மருத்துவமனையில் கிளைகள் ஏராளமாக உள்ளன. முதலில் அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். பிறகு அறிவிக்கலாம் என்று கூறிவிட்டனர் என்று திவாகரன் கூறியுள்ளார்.

    திவாகரனின் புது குண்டு

    திவாகரனின் புது குண்டு

    தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டார். தற்போது புதிய குண்டை திவாகரன் போட்டுள்ளார். இதற்கு என்னென்ன பின்விளைவுகள் வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+