தீபாவளி பண்டிகை... நெல்லை வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி, நெல்லை வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை-நாகர்கோவில், நாகர்கோவில்-நெல்லை வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை-எழும்பூர்-நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில் எண் (06039) சென்னை எழும்பூரிலிருந்து இன்று பகல் 12.55 மணிக்கு புறப்பட்டு மதுரை வழியாக நாளை அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலை அடையும்.

Diwali festival: Special trains plies in Nellai

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டி, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு மாலை 5.30 மணிக்கு தொடங்கியுள்ளது.

மறு மார்க்கத்தில் நாகர்கோவில்-சென்னை சுவிதா ரயில் நாகர்கோவிலில் இருந்து 22ம் தி மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னையை அடையும்.

இந்த ரயில் நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கும்பகோணம், சிதம்பரம், விழுப்புரம், செங்கப்பட்டு, தாம்பரம் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ரயில்களிலும் 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் (பர்த்) பெட்டிகளும், 5 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+