அண்ணா அறிவாலயத்திற்கு விஜயகாந்த் வரப்போவதாக பரவிய தகவல்…. பரபரப்பு
சென்னை: லோக்சபா தேர்தல் கூட்டணிக்காக திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்ணா அறிவாலயம் வரப்போவதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டும் சில முக்கிய கட்சிகளிடையே கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. கூட்டணிக்கான கதவு சாத்தப்பட்டு விட்டது என்று ஒருபுறம் திமுக கூறிக்கொண்டிருந்தாலும் எப்படியாவது தேமுதிக வந்து விடாதா என்று எதிர்பார்ப்போடுதான் இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜக உடன் கூட்டணி பற்றி பேசிக்கொண்டே திமுகவிலும் நூல் விட ஆரம்பித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தை அறிவாலயத்திற்கோ, கோபாலபுரத்திற்கோ பேச வரலாம் என்று அழைப்பு விடுத்தார் திமுக தலைவர் கருணாநிதி.
இந்த நிலையில் நேற்றிரவு திமுக உடன் கூட்டணி தொடர்பாக பேச விஜயகாந்த் அறிவாலயம் வரப்போவதாக பரபரப்பு தகவல் வெளியானது.
இதனால் செய்தியாளர்களும், கட்சியினரும் அறிவாலயத்தில் குவிந்தனர். ஆனால் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்தும் விஜயகாந்த் வரவில்லை. கடைசியில் அந்த தகவல் வெறும் வதந்தி என்பது தெரியவந்தது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications