மத்திய அரசை விமர்சிக்காத தே.மு.தி.க: பா.ஜ.க. அணியில் நீடிக்க 'கேப்டன்' விருப்பம்?
கோயம்புத்தூர்: தே.மு.தி.க.வின் பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானங்களில் மத்திய அரசின் செயல்பாடுகள் மீதான விமர்சனம் எதுவும் இடம்பெறாத நிலையில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கவே விஜயகாந்த் விரும்புவதாக கூறப்படுகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.. பா.ம.க, ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால், தே.மு.தி.க. போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியது. ஆனால், போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் 2வது இடத்தை பிடித்திருந்தது.

மேலும் வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தே.மு.தி.க. தலைமையில் கூட்டணி அமையும் என ஏற்கனவே பா.ஜ.க.வுக்கு நிபந்தனை விதித்திருந்தது. ஆனால், இப்போது, அக்கூட்டணியில் இருந்த ம.தி.மு.க. விலகியுள்ளது. இதையடுத்து, பா.ம.க. தன் நிலையை இன்னும் அறிவிக்கவில்லை.
இதனிடையே சமீபத்தில் சென்னைக்கு வந்த பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவை அன்புமணி, ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் மட்டும் சந்தித்தனர். தே.மு.தி.க.வினர் யாரும் அவரை சந்திக்கவில்லை. தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் கூட்டணி அமைத்து முதல்வர் வேட்பாளரை அறிவித்து போட்டியிடுவோம் என்று அமித்ஷா பேசியிருப்பது, தே.மு.தி.கவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கோவையில் நேற்று தே.மு.தி.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், நிறைவேற்றப்பட்ட 20-க்கும் மேற்பட்ட தீர்மானங்களில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளை தே.மு.தி.க. விமர்சிக்கவில்லை. இதனால், கூட்டணியில் நீடிக்கவே தே.மு.தி.க. விரும்புவதாக கருதப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications