பசுந்தோல் போர்த்திய ஊழல்வாதிகளுக்கு சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒரு எச்சரிக்கை:விஜயகாந்த்
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான தீர்ப்பை வரவேற்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: சிறையில் இருப்பவர்கள் மட்டும் குற்றவாளிகள் என்றோ, வெளியில் இருப்பவர்கள் அனைவரும் நியாயவாதிகள் என்றோ கிடையாது. இன்றும் ஊழல் செய்த பலபேர், பசுந்தோல் போர்த்திய புலிகளாக வலம் வருகிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்து குவிப்பு வழக்கில் வெளிவந்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக அமைந்துள்ளது. 21 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது.

ஊழல் செய்யும் எந்த அரசியல்வாதிகளாக இருந்தாலும் இனிமேல் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவில் எங்கும் ஊழல் செய்ய முடியாது. இனிமேல் ஊழல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் உருவாகாதபடி அரசியல் களத்தை உருவாக்க கூடிய வகையில் வந்துள்ள இந்த நல்ல தீர்ப்பை மனதார வரவேற்கிறேன்.
அதேபோல் குன்கா அளித்த தீர்ப்பு சரியானது தான் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை உண்மையில் ஒரு சிறந்த தீர்ப்பாக கருகிறேன். நிலை இல்லாமல் கட்சியை விட்டு கட்சி தாவுபவர்கள், ஊழல் செய்பவர்கள் என அனைவருக்கும் ஒரு பயமும் நியாயமாகவும் உண்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் அனைத்து வகையிலும் இந்த தீர்ப்பு வழங்குவதாக அமைந்துள்ளது.
ஊழல் இருக்க கூடாது என்று கூறிய முதல் கட்சி தேசிய முற்போக்கு திராவிட கழகம். அந்த வகையில் யார் ஊழல் செய்தாலும் அது மிகவும் தவறு. குறிப்பாக அரசியல்வாதியாக இருந்து கொண்டு மக்களுக்கு சேவையாற்ற கூடிய அரசியல் களத்தில் இருப்பவர்கள் இனிமேல், ஊழல் என்ற எண்ணத்திற்கே செல்லாமல், நல்ல வகையில் ஆட்சி செய்வதற்கு இந்த தீர்ப்பு நிச்சயம் வழிவகை செய்யும்.
சிறையில் இருப்பவர்கள் மட்டும் குற்றவாளிகள் என்றோ, வெளியில் இருப்பவர்கள் அனைவரும் நியாயவாதிகள் என்றோ கிடையாது. இன்றும் ஊழல் செய்த பலபேர், பசுந்தோல் போர்த்திய புலிகளாக வலம் வருகிறார்கள். அவர்களுக்கும் இந்த தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
மேலும் தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக இழுபறி நீடித்து வருவது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது கிடையாது. தமிழகத்தில் நீடிக்கும் நிலையற்ற தன்மையை விரைவில் அகற்றும் வகையில் சட்டசபையை உடனடியாக கூட்டி யாருக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்பதை நிரூபிக்க ஆளுநர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனி வருங்காலங்களில் லஞ்சம் ஊழல் இல்லாத நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் எண்ணம். அந்த வகையில், இந்த தீர்ப்பை வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாக கருதி தேமுதிக சார்பில் வரவேற்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications