குரு பகவான் கோவிலில் குவிந்த திமுக முக்கிய நிர்வாகிகள்
தஞ்சை: தங்களது பதவியை காப்பாற்றக் கோரி குரு பகவான் கோவிலில் திமுக முக்கிய நிர்வாகிகள் குவிந்தனர்.
ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம் பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குருபகவான். இவர் தேவர்களுக்கு எல்லாம் தலைவராவார். மனித வாழ்க்கைக்கு தேவை பணம் மற்றும் பதவி. ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால் தான் இந்த இரண்டும் தங்குதடையின்றி கிடைக்கும் என்பது ஜோதிடவிதி.
இந்த நிலையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து கட்சியை சீரமைக்க 6 பேர் கொண்ட குழுவை திமுக தலைமை அமைத்து, அறிக்கை பெற்றது.
இதில் திமுகவில் 65 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் எந்த நிலையிலும், தங்களது பதவிக்கு ஆபத்து வந்தவிடக் கூடாது என பல முக்கிய திமுக மாவட்டச் செயலாளர்கள் கடந்த 14ம் ம் தேதி குருப் பெயர்ச்சியை முன்னிட்டு தஞ்சை ஆலங்குடியிலும், தஞ்சை அருகில் உள்ள தென்குடித்திட்டை எனும் ஊரில்அருள்பாலிக்கும் ஸ்ரீவசிஷ்டேஷ்வரரையும் வழிபட்டுள்ளனர்.
சிலர் தாங்கள் நேரடியாக சென்று வணங்கினால் சர்ச்சை வரும் என்பதால் தங்களது மனைவி மற்றும் வீட்டில் உள்ள முக்கிய நபர்களை அனுப்பி பரிகார பூசை செய்துள்ளனர்.
இதில் கொங்கு மண்டலத்தில் உள்ளவர்கள் முதலிடத்திலும், தென் மண்டத்தில் உள்ளவர்கள் இரண்டாவதாகவும் உள்ளனராம்.












Click it and Unblock the Notifications