பணப்புகாரில் அதிமுகக்காரர் வீடு முற்றுகை.. 'சவுண்ட் விட்ட' பெண்மணி.. தெறித்து ஓடிய திமுகவினர்
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகரில் ஒரு வீட்டுக்குள் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி திமுகவினர் முற்றுகையிட்ட நிலையில் அந்த வீட்டுக்கார பெண்மணி வந்து 'சவுண்ட்' விட்டதும் எல்லோரும் தெறித்து ஓடிய சம்பவம், அரங்கேறியது.
காவல்துறையினரையும் அழைத்துக்கொண்டு திமுகவினர் இன்று கொருக்குப்பேட்டையிலுள்ள ஒரு வீட்டை முற்றுகையிட்டனர். அந்த வீட்டுக்குள் அதிமுகவினர் சார்பாக பணம் பட்டுவாடா செய்ய மூட்டை மூட்டையாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினர் திமுகவினர்.

அந்த வீட்டை சேர்ந்த நபர் ஒருவர், அப்படி எதுவும் இங்கு இல்லை என கூறி வாக்குவாதம் செய்து பார்த்தார். ஆனால் திமுகவினர் ஏற்கவில்லை. சிலர் வீட்டு கதவை உடைக்கவும் முற்பட்டனர்.
அப்போதுதான் வீட்டுக்கார பெண்மணி வெளியே இருந்து வீட்டுக்கு வந்தார். "இங்க எதுக்கு கூட்டம் போடுறீங்க. என் வீட்டில் உங்களுக்கு என்ன வேலை" என வீட்டு கதவு முன்னால் நின்று கொண்டு அந்த பெண்மணி 'சவுண்ட்' கொடுக்க திமுகவினர் நைசாக ஜகா வாங்கி இடத்தை காலி செய்தனர்.
இதையடுத்து அங்கு போலீசார் வந்து நின்று, வீட்டுக்குள் யாரும் போக கூடாது என கூறி வீட்டை வெளியே இருந்து பூட்டு போட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications