திமுக அல்லது அதிமுக அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வராது: அன்புமணி ஆரூடம்
தூத்துக்குடி: அடுத்த சட்டசபை தேர்தலில் திமுக அல்லது அதிமுக அல்லாத ஆட்சி அமையும் என்று பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
தென்மாவட்ட பா.ம.க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், தூத்துக்குடியிலுள்ள ரெசார்ட் ஒன்றில் நடந்தது. இதில், மதுரை, ராமநாதபுரம், தேனி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, தென் மாவட்டங்களில் கட்சியை வளர்க்க ஆலோசனை வழங்கிய அன்புமணி, ஒவ்வொருவருக்கும் தனது மகள் திருமண நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினார்.

இதன்பிறகு அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி: இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை என பல்வேறு பிரச்னைகள் இருந்து வருகிறது. அதற்கு நிரந்தரமாக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம் பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. ஐ.நா மன்றத்தில் ராஜபட்சேவை பேச விடக்கூடாது என்கிற கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
தமிழ்நாட்டை பொருத்தவரை திறமையில்லாத ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர்தான் மின் கட்டணத்தை உயர்த்திய மாநில அரசு, இப்போதும் உயர்த்தி, மக்களை வாட்டி வதைக்கிறது. ஆனால், மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என ஏமாற்று வித்தை காண்பிக்கிறது.
கடந்த சட்டசபை தேர்தல் முடிந்த உடனேயே, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தினார்கள். இப்போது உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிந்த கையோடு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். தவறெல்லாம் செய்துவிட்டு எல்லாமே நன்றாக இருப்பதுபோல் மாய தோற்றத்தை உண்டாக்குகிறார்கள்.
நான் நேற்று திருச்செந்தூருக்கு போய் வந்தேன். இடையில் ஆத்தூர் வழியாக ஓடும் தாமிரபரணி ஆற்றை பார்த்தேன். அதில் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆனால், இதே நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகள் பாலைவனம் போலவும் காட்சியளிக்கிறது. எனவே வீணாக போகும் நீரை முறையாக பயன்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கலாம். அந்த மாதிரி எதாவது இதுவரை இருந்த தி.மு.க., அதி.மு.க. அரசுகள் செய்ததா என்றால் இல்லை என்பதுதான் பதில்.
வருங்காலங்களில் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமானால் இவர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும். புதிய ஆட்சி வரவேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் இந்த இருகட்சிகளும் இல்லாத புதிய ஆட்சி தமிழகத்தில் மலரும். எந்த கட்சியெல்லாம் இதில் இடம் பெறும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications