திருச்சி: திமுகவின் பிரம்மாண்டமான 10வது மாநில மாநாடு - கோலாகல தொடக்கம்!
திருச்சி: திருச்சியில் திமுகவின் 10வது மாநில மாநாடு இன்று காலை தொடங்கியது. இம்மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்தும் பல லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர்.
திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் அருகே தி.மு.க.வின் 10- வது மாநில மாநாடு இன்று காலை தொடங்கியது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது. அந்த திடல் லட்சக்கணக்கான தொண்டர்களால் நிரம்பி வழிகிறது.

இம் மாநாடு நடைபெறும் இடத்திற்கு அண்ணாநகர் என்றும் மாநாட்டு திடலுக்கு தந்தை பெரியார் பெயரும் சூட்டப்பட்டு உள்ளன. மாநாட்டு திடலின் பிரதான நுழைவு வாயிலுக்கு தா.கிருஷ்ணன் முன் முகப்பு என்றும், உள் முகப்பிற்கு திருச்சி முன்னாள் நகராட்சி தலைவர் மா.பாலகிருஷ்ணன், மாநாட்டு பந்தலுக்கு வீரபாண்டி ஆறுமுகம் பெயரும், பொற்செல்வி அரங்கம் என்றும், மாநாட்டு மேடைக்கு வாசுகி முருகேசன் பெயரும் சூட்டப்பட்டு உள்ளன.
மாநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் இரவே திருச்சிக்கு வந்து விட்டார். நேற்று மாநாட்டு திடலுக்கு சென்று பார்வையிட்டார்.
பந்தலின் முகப்பில், தி.மு.க. கொடியை கருணாநிதி ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது இளைஞர் அணியினர் மற்றும் மகளிர் தொண்டர் அணியினரின் அணிவகுப்பு மரியாதையை கருணாநிதி ஏற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் தி.மு.க. பொது செயலாளர் அன்பழகன் மாநாட்டை திறந்து வைத்தார். அதன் பின்னர் மாநாட்டு பந்தலில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
படத்திறப்பு விழா
காலை 11 மணிக்கு மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வரவேற்று பேசினார். அதன் பின்னர் படத் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
தந்தை பெரியார் படத்தை திமுக வெளியீட்டு செயலாளர் செல்வேந்திரனும், அண்ணா உருவபடத்தை திருச்சி சிவா எம்.பி.யும், சர்.பிட்டி தியாகராயர் படத்தை சபாபதி மோகனும், டி.எம்.நாயர் படத்தை கோவை மு.ராமநாதனும், டாக்டர் நடேசனார் படத்தை ஆலந்தூர் பாரதியும்,

புரட்சி கவிஞர் பாரதிதாசன் படத்தை கவிதை பித்தனும், மூவாலூர் மூதாட்டியார் படத்தை சுப்புலட்சுமி ஜெகதீசனும், சத்தியவாணிமுத்து படத்தை நூர்ஜகான்பேகமும், மொழிப்போர் தியாகிகள் உருவபடத்தை பொன்முடியும் திறந்து வைத்து உரையாற்றினர்.

மாலையில் பல்வேறு தலைப்புகளில் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பேசுகின்றனர். இரவு 8 மணிக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சிறப்புரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு நாடகம் நடைபெறும். இத்துடன் முதல் நாள் மாநாட்டு நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications