காவிரி மீட்பு பயணம்... ஏப்.16ல் திமுக கண்டன ஆர்பாட்டம் - ஸ்டாலின்
எஸ்சி எஸ்டி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ஏப்ரல் 16ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி என்று ஸ்டாலின் கூறியுள்ளார். எஸ் சி, எஸ் டி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ஏப்ரல் 16ல் சென்னையில் ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி உரிமை மீட்பு பயணம் இரண்டு குழுக்களாக பிரிந்து நடைபெற உள்ளதாக கூறினார்.

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள கால அவகாச மனுவை திரும்ப பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரி மீட்பு பயணத்தை டெல்டாவில் நடத்துவது என்று ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானித்திருந்தோம். அதை எப்படி நடத்துவது என்று இந்த கூட்டத்தில் பேசினோம். நாளைய தினம் முக்கொம்புவில் இருந்து ஒரு குழுவும், 9ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஒரு குழுவும் பயணத்தை தொடங்குகிறது.
இந்த பயணத்தை திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தொடங்கி வைக்கிறார். இந்த பயணத்தில் முக்கிய தலைவர்கள் மட்டுமல்லாது மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.
எஸ்சி எஸ்டி பிரச்சினையில் ஏற்கனவே இருக்கும் வன்கொடுமை தடுப்பு சட்ட சரத்துக்கள் நீர்த்துப்போகச் செய்யும் உச்சநீதிமன்ற உத்தரவை திரும்ப பெற வழியுறுத்தி ஏப்ரல் 16ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்காக எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க தயார். நீதிமன்றம் கொடுக்கும் தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?











Click it and Unblock the Notifications