கொலையுண்ட எண்ணூர் ரித்திகாவின் குடும்பத்தினருக்கு ஸ்டாலின் ஆறுதல்
சென்னை எண்ணூரில் கொலை செய்யப்பட்ட குழந்தை ரித்திகாவின் குடும்பத்தினரை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
சென்னை: திருவொற்றியூர்- மணலி சாலையில் குப்பைக் கிடங்கில் சடலமாக மீட்கப்பட்ட 3 வயது சிறுமி ரித்திகாவின் குடும்பத்தினரை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் பழனியின் மகள் ரித்திகாவை (3) கடந்த சனிக்கிழமை முதல் காணவில்லை. இந்நிலையில் சிறுமி குப்பைக் கிடங்கில் சடலமாக கிடந்தாள்.

எண்ணூர் போலீஸார் விசாரணையில், குழந்தையிடம் இருந்த நகைக்காக அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரேவதி என்பவர் கடத்திக்கொ லை செய்தது அம்பலமானது.
இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை ரித்திகாவின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை. தற்போதைய அதிமுக அரசு செயல்படாத அரசாக உள்ளது என்றார் ஸ்டாலின்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட போரூர் சிறுமி ஹாசினியின் குடும்பத்தினரையும் அண்மையில் ஸ்டாலின் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழிசை அஞ்சலி
அதேபோல இறந்த ரித்திகாவின் உடலுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது கனத்த இதயத்துடன் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதாக கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications