குடித்துவிட்டு கூவத்தூர் காவல் நிலையத்தில் ரகளை.. 6 மாதமாக குட்டி நாகராஜின் பரிதாப நிலை தெரியுமா?
செங்கல்பட்டு: குட்டி நாகராஜை நினைவிருக்கிறதா? கடந்த மே மாதம் கூவத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் பைக்கை பறிமுதல் செய்த போது இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் பேசினார். ஆனால் இன்று அந்த நாகராஜின் நிலை பரிதாபத்துக்குரிய வகையில் மாறிவிட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த வேப்பஞ்சேரியை சேர்ந்தவர் நாகராஜ். இவருக்கு 32 வயதாகிறது. ஆயினும் இவர் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளியாவார். இவர் சொந்த ஊரில் பிழைப்பு நடத்தி வருகிறார்.

கடந்த மே மாதம் போலீஸார் வாகன சோதனை செய்தபோது மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நாகராஜை மடக்கிய போலீஸார் அவருடைய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
நாகராஜ் போலீஸாரிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். போதையில் நாகராஜ் செய்த அலப்பறையால் போலீஸார் அவரை கூவத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அந்த நபர் ஒரு டீசர்ட்டையும் நீல நிறத்தில் டவுசரையும் போட்டிருந்தார். அவர் போதையில் போலீஸாரை இஷ்டத்திற்கு வசை பாடினார். போலீஸாரை கண்ட படி பேசினார். உடனே போலீஸார் செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டவுடன் பம்மிய நாகராஜ், ஒவ்வொரு போலீஸாரையும் நீ எந்த ஊரு நீ எந்த ஊரு என கேட்க அவர்களும் நான் ஜப்பான், நான் கொரியா என பதிலளித்தனர்.
அப்போது போலீஸார் நீதான் தைரியமான ஆளாச்சே, முன்னாடி ஏதோ எங்களை சொன்னியே அதை இப்போ சொல்லேன் பார்ப்போம் என்றனர். அதற்கு நாகராஜ் அதெல்லாம் சொல்ல முடியாது என்கிறார். ஒரு கட்டத்தில் சட்டையை கழற்றிவிட்டு ஒண்டிக்கு ஒண்டி வர்ரியா என சண்டைக்கு வருமாறு சவால் விட்டார். போலீஸார் அவரை சமாதானப்படுத்த முயற்சித்தும் அவர் கேட்கவில்லை. காமெடி பீசு என சொன்ன போலீஸாரிடம் யார் காமெடி பீசு என அடிக்க பாய்ந்தார் நாகராஜ்.
போலீஸாரை வாடா போடா என நாகராஜ் சொல்லிய நிலையில் அவரை நீ என் கால் உயரம் கூட இல்லை எங்களையே மிரட்டுறியா என போலீஸார் உருவ கேலி செய்தது போல் பேசியிருந்தனர். பின்னர் டவுசரில் இருந்த காசுகளை எல்லாம் வீசும் நாகராஜ், இதுக்குத்தானே என்னை இப்படி செய்றீங்க இந்தாங்க என கோபமாக பேசி கண்ணீர் விட்டு அழுகிறார்.
தொடர்ந்து ரகளை செய்த நாகராஜை போலீஸார் பிடிக்க முயன்ற போது அவர் தப்பி ஓட முயற்சித்தார். அப்போது வழுக்கி விழுந்ததால் எதிர்பாராதவிதமாத இடதுகாலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீஸார் அவருக்கு காலில் மாவுக்கட்டையும் போட்டுவிட்டனர்.
அப்போது நாகராஜ் கூறுகையில் என்னை போலீஸார் கேலி செய்தனர். மேலும் என் காலை உடைத்தது போலீஸ்தான். மூன்று போலீஸார் சேர்ந்துதான் என் காலை உடைத்தார்கள் என தெரிவித்திருந்தார். தற்போது 6 மாதங்கள் ஆன நிலையில் நாகராஜால் ஊன்றுக்கோலின் உதவியின்றி நடக்க முடியவில்லை. அவரால் வியாபாரத்திற்கும் செல்ல முடியவில்லை. இவரது மனைவியும் மாற்றுத்திறனாளி என்பதால் அவர்தான் இவருக்கு உதவிகளை செய்கிறாராம்.
இதுகுறித்து நாகராஜ் கூறுகையில் 6 மாதம் ஆனது என்னால் நடக்கவே முடியவில்லை. எனக்கு அரசு ஏதேனும் உதவி செய்து என்னை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற வேண்டும். இப்போது சிலர் பண உதவிகளையும் செய்கிறார்கள். ஆனாலும் என்னால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்க முடியவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் எனக்கு உதவி செய்து என் காலை குணமாக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications