தருண் விஜயின் இனவெறிப்பேச்சு.. மன்னிப்பு கேட்பதால் மட்டும் மனஅழுக்கு விலகுவதில்லை... ராமதாஸ் கண்டனம்
பாஜக தலைவர் தருண் விஜய் இனவெறி பேச்சுக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மன்னிப்பு கேட்டால் மட்டும் மனஅழுக்கு விலகுவதில்லை என்று பாமக தலைவர் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: கென்ய நாட்டை சேர்ந்த இளைஞர் இந்தியாவில் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அளித்த பேட்டியொன்றில், தென் இந்தியாவில் கறுப்பு நிறம் கொண்டவர்களிடம் நாங்கள் விரோதம் பாராட்டவில்லையே என்று திமிர்தனமாக தருண் விஜய் பேசி தமிழர்களிடம் நன்றாக மாட்டிக் கொண்டார்.
இதற்கு பெரிய அளவில் தென்னிந்தியாவைச் சேர்ந்த தங்களது கண்டனத்தை பதிவு செய்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் தருண் விஜயை வறுத்தெடுத்து வருகின்றனர்.

கடும் எதிர்ப்பை தாங்க முடியாத தருண் விஜய், தனது பேச்சு புண்படுத்திவிட்டதாக நினைப்பவர்களுக்கு தனது மன்னிப்பை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பம்மாத்து மன்னிப்பை ஒப்புக்கு கேட்டு வைத்தார்.
தருண் விஜய் மன்னிப்புக் கேட்டாலும் இன்னும் இரண்டு நாட்களுக்கு வச்சி செய்வோம் என்று சமூக வலைதளங்களில் ஆக்ரோஷமாக பலர் பதிவிட்டு வருகின்றனர்.
தென்னிந்தியர் கருப்பர்கள் என்ற தருண் விஜயின் இனவெறிப் பேச்சு கண்டிக்கத்தக்கது. மன்னிப்பு கேட்பதால் மட்டும் மன அழுக்கு விலகுவதில்லை!
— Dr S RAMADOSS (@drramadoss) April 8, 2017
இந்நிலையில், பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தருண் விஜயை கடுமையாக கண்டித்து பதிவிட்டுள்ளார். அதில், "தென்னிந்தியர் கருப்பர்கள் என்ற தருண் விஜயின் இனவெறிப் பேச்சு கண்டிக்கத்தக்கது. மன்னிப்பு கேட்பதால் மட்டும் மன அழுக்கு விலகுவதில்லை!" என்று ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications