குமரி முனையில் நின்று இமயத்தைத் தொட்டுப் பார்த்தவர் கருணாநிதி.. துரைமுருகன் புகழாரம்!
குமரி முனையில் நின்று இமயத்தைத் தொட்டுப் பார்த்தவர் கருணாநிதி என நினைவேந்தல் கூட்டத்தில் துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை: குமரி முனையில் நின்று இமயத்தைத் தொட்டுப் பார்த்தவர் கருணாநிதி என நினைவேந்தல் கூட்டத்தில் துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் பல்வேறு தேசிய தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் இந்த நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்றிருப்பவர்களை திமுக பொருளாளர் துரைமுருகன் ஆங்கிலத்தில் பேசி வரவேற்றார்.

இமயத்தை தொட்டுப்பார்த்தவர்
அவர் பேசியதாவது, கருணாநிதி அகில இந்திய அளவில் புகழ் பெற்றவர். குமரி முனையில் நின்று இமயத்தைத் தொட்டுப் பார்த்தவர்.

பொருளாதாரக் கொள்கை
அகில இந்திய அரசியலில் ஆளுமை பெற்றவர் கருணாநிதி.வங்கிகளை தேசியமயமாக்கலாம் என்ற பொருளாதாரக் கொள்கையை அறிவித்தவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி.

மகத்தான மனிதர்
கருணாநிதி சிறந்த பேச்சாளர், சிறந்த வசனகர்த்தா.
சிறந்த நிர்வாகி, கட்சியை திறம்பட கட்டிக் காத்தவர். மனித மனங்களைப் புரிந்து கொண்ட மகத்தான மனிதர் கருணாநிதி.

கருணாநிதிக்கு புகழாரம்
50 ஆண்டுகள் திமுகவை திறம்பட தலைமை தாங்கி நடத்தியவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. செம்மொழி தமிழ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியவர் கருணாநிதி. இவ்வாறு துரைமுருகன் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications