டி.ஜி.பி. ராமானுஜம் பதவி நீட்டிப்பு: திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: காவல்துறையின் நிர்வாக பணிகளை கவனிக்க டி.ஜி.பி. ராமானுஜத்துக்கு அனுமதி வழங்க கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

லோக்சபா தேர்தல் முடியும் வரை, தமிழக சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி.யாக அனூப் ஜெய்ஸ்வாலை நியமித்து கடந்த 5ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டார்.
அதேநேரம், ஏற்கனவே சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்த ராமானுஜம், தமிழக காவல்துறையின் நிர்வாக பணியை கவனிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
ஒரு மாநிலத்தில், 2 டி.ஜி.பி.க்கள் இருந்தால், யாருடைய உத்தரவை கேட்டு செயல்பட வேண்டும் என்று கீழ் மட்ட போலீஸ் அதிகாரிகள் மத்தியில் தேவையில்லாத குழப்பம் ஏற்படும்.
எனவே, காவல்துறையின் நிர்வாக பணிகளை கவனிக்க டி.ஜி.பி. ராமானுஜத்துக்கு அனுமதி வழங்க கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜி.ராஜகோபாலன், அனூப் ஜெய்ஸ்வாலை டி.ஜி.பி.யாக நியமித்து பிறப்பித்த உத்தரவினை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
பின்னர் தன்னுடைய வாதத்தில், ‘தமிழகத்தில் டி.ஜி.பி. முதல் காவலர் வரை அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளனர்.
தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள டி.ஜி.பி. அனூப் ஜெய்ஸ்வாலின் கட்டுப்பாட்டில் தமிழக காவல் துறை செயல்படும். ஏற்கனவே டி.ஜி.பி.யாக இருந்த ராமானுஜத்துக்கு மாற்றுப்பணி வழங்கினால், அது பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக அமைந்து விடும்' என்று கூறினார்.
தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications