“முத்திருச்சு”.. அண்ணாமலை மீது எடப்பாடி நேரடி “அட்டாக்” -இதான் முதல்முறை! பிரிகிறதா அதிமுக - பாஜக?
சென்னை: திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி அண்ணாமலை நேற்று வெளியிட்ட தகவலும் அப்போது அவர் பேசியதும் அவருக்கு எதிராகவே திரும்பி இருக்கும் நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமியே முதல்முறை அண்ணாமலையை நேரடியாக விமர்சித்து இருப்பதன் மூலம், அதிமுக - பாஜக கூட்டணி இடையிலான விரிசல் அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது.
"முதிர்ந்த அரசியல்வாதி பற்றி கேட்டால் கருத்து சொல்லலாம். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காகவே அண்ணாமலை பேசி வருகிறார். அவரை பற்றி என்னிடம் எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம்." அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து இது.
இதற்கு முன் எடப்பாடி பழனிசாமியின் பேட்டிகளையும், அறிக்கைகளையும் எடுத்து பார்த்தால் அண்ணாமலையை நேரடியாக விமர்சித்து அவர் பேசுவது இதுவே முதல் முறை என்பது விளங்கும். அதிமுக - பாஜக கூட்டணியாக இருந்தாலும் இரு கட்சிகளிடையே நாட்கள் செல்ல செல்ல விரிசல் விரிவடைந்துகொண்டே செல்கிறது.

அதிமுகவில் எடப்பாடி தரப்புக்கும் தமிழ்நாடு பாஜக நிர்வாகத்திற்கும் இடையே மனக்கசப்பு இருந்தது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போதே அவ்வப்போது வெளிப்பட்டது. தேர்தல் பணிமனையில் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பெயர்களை சேர்க்காதது, தேசிய ஜனநாயக கூட்டணி என்று குறிப்பிடாதது என பல்வேறு சர்ச்சைகள் அப்போதே கிளம்பின.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் சீனியர் நிர்வாகியும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக பொருப்பாளருமான செங்கோட்டையன் நேரடியாகவே பாஜகவை விமர்சித்தார். "பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் ஈரோடு கிழக்கு தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு விழவில்லை." என்று தெரிவித்தார்.
அந்த சமயத்தில் பாஜக ஐடி விங் மாநில செயலாளராக இருந்த நிர்மல் குமார் மற்றும் அவரை பின்தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் பலர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். இதனால் அதிருப்தி அடைந்த அண்ணாமலையின் வலதுகரமான அமர் பிரசாத் ரெட்டி நேரடியாகவே இதை கண்டித்தார். அண்ணாமலையும் ஒரு பேட்டியில் இதனை சுட்டிக்காட்டி விமர்சித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அண்ணாமலையை ஒரு பொதுக்கூட்டத்தில் கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கு பதிலடி தரும் வகையில், அண்ணாமலையை கடம்பூர் ராஜு ஒருமையில் விமர்சித்ததாக கூறி அவரை, கத்துக்குட்டி என்று நேரடியாகவே சாடினார் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன். இதற்கு அதிமுகவினரும் பல்வேறு கோணங்களில் பதிலடி கொடுத்தனர்.
இப்படி இரு தரப்பிலிருந்தும் வார்த்தை போர் தொடர்ந்து வந்தது. உச்சக்கட்டமாக எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்து தூத்துக்குடியில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக அண்ணாமலையின் உருவ பொம்மையை அரியலூரில் அதிமுகவினர் எரித்தனர். கூட்டணியாக இருந்துகொண்டு இந்த அளவுக்கு மோதிக்கொள்கிறார்களே! என்ற கேள்வி மக்கள் மத்தியிலேயே எழுந்தது.
இந்த நிலையில், அண்ணாமலை பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் வரும் 2024 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். தமிழ்நாட்டில் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்திய அவர், அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தலைவர் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு தொண்டராக கட்சியில் தொடர்வேன் என்று எச்சரித்தார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜகவினரின் இந்த தொடர் எதிர்ப்பு, அதிமுகவுக்கு எதிரான அண்ணாமலையின் நிலைபாடுகளுக்கு எல்லாம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் பதிலடி கொடுத்தாலும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதை கண்டும் காணாதபடியே கடந்து சென்றார். செய்தியாளர் சந்திப்புகளில் அது பற்றி கேட்டாலும் பதிலளிக்காமல் தவிர்த்துவிடுவார்.
இந்த நிலையில் நேற்று DMK files என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி சில தகவல்களை வெளியிட்டார் அண்ணாமலை. அது ஊழல் பட்டியலில் அல்ல, சொத்துப் பட்டியல் என்று திமுகவினரே அதனை அதிகம் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்ததாக அனைத்துக் கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடப்போவதாக அண்ணாமலை அறிவித்து உள்ளார்.

திமுகவுக்கு இணையாக தமிழ்நாட்டில் பெரிய கட்சி என்றால் அது அதிமுகதான். கூட்டணியாக இருந்தாலும் அண்ணாமலை அதிமுக மீது அதிருப்தியில் இருப்பதால் அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவது பற்றிதான் அவர் இவ்வாறு சொல்லி உள்ளர் என்று பலர் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், அனைத்துக் கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடப்போவதாக அண்ணாமலை சொன்னது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.
இதில் பதிலளித்த ஜெயக்குமார், "அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல் என்றே அண்ணாமலை சொல்லி இருக்கிறார். அதிமுக என்று அவர் கூறவில்லை. இப்போது நான் சவால் விடுகிறேன். அதிமுக என அண்ணாமலை சொல்லட்டும்.. அதன் பிறகு நான் உங்கள் கேள்விக்கு பதிலளிக்கிறேன். எங்கள் ரியாக்சனை நீங்கள் பார்ப்பீர்கள்." என்றார். ஜெயக்குமாரின் இந்த பேச்சு அண்ணாமலை எச்சரிக்கும் வகையில் இருந்தது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்முறை நேரடியாக அண்ணாமலையை முதிர்ச்சியற்ற தலைவர் என்று பொருள்படும்படி விமர்சித்து இருக்கிறார். இதன் மூலம் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணியின் விரிசல் மேலும் அதிகரித்து உள்ளது. இதற்கு அண்ணாமலை தரப்பு என்ன எதிர்வினை ஆற்றப்போகிறது என்று தெரியவில்லை. அதே நேரம் இந்த விரிசலை டெல்லி எப்படி ஒட்டப்போகிறது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications