சிவகாசி பட்டாசு கிடங்கு விபத்து: புகையில் மூச்சுத் திணறி 9 பேர் மரணம்- விருதுநகர் ஆட்சியர்
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அருகில் இருந்த ஸ்கேன் சென்டரில் இருந்தவர்கள். பட்டாசு புகையில் மூச்சுத் திணறியே இவர்கள் உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் சிவஞானம் கூறியுள்ளார்.
சிவகாசியில் உள்ள பட்டாசு கிடங்கில் இருந்து இன்று பிற்பகலில் மினிலாரி ஒன்றில் பட்டாசு பண்டில்கள் ஏற்றப்பட்டன. திடீரென உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தால் ஏற்பட்ட தீப்பிழம்பு அருகிலிருந்த ஸ்கேன் சென்டருக்கும் பரவியது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் அலறித்துடித்தனர். பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஸ்கேன் சென்டரின் பின்பக்க ஜன்னலை உடைத்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். இதேபோல் கிடங்கிற்கு அருகே இருந்த 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் லாரிகள் தீயில் எரிந்து சாம்பலாகின.
தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 பெண்கள் உள்பட 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது இறந்தவர்களின் பெயர் தெரியவந்துள்ளது. அவர்களில் வளர்மதி, பாஸ்கர், ராஜா, சொர்ணகுமாரி, தேவி, பத்மாவதி, சுப்புலட்சுமி என தெரியவந்துள்ளது. உயிரிழந்த 9 பேரும் அருகில் இருந்த ஸ்கேன் சென்டரில் சிகிச்சை பெற வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. ஸ்கேன் சென்டரில் 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் அனைவரையும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் சிவஞானம், மாவட்ட எஸ்.பி ராஜராஜன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சிவஞானம், பட்டாசு ஆலை விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார். புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக ஆட்சியர் சிவஞானம் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications