ஆட்சியை கலைப்போம் என்பவர்கள் ஜெயலலிதாவை என்னபாடு படுத்தியிருப்பார்கள்? பொதுக்குழுவில் வளர்மதி ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சசிகலா மீது கடும் கோபமான வளர்மதி-வீடியோ

சென்னை: ஆட்சியை கலைப்போம் என்பவர்கள் ஜெயலலிதாவை என்னபாடு படுத்தியிருப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கூறினார்.

சென்னை, வானகரம் பகுதியிலுள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பா.வளர்மதி வரவேற்புரையாற்றி பேசுகையில், ஆவேச கருத்துக்களை எடுத்துரைத்தார்.

 Ex Minister Valarmathi slam Sasikala family at Aiadmk General Council

ஆட்சியை கலைப்போம் என்பவர்கள் ஜெயலலிதாவை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள்? என்று சீறிய வளர்மதி ஜெயலலிதாவின் ஆட்சியை விரட்டுவோம் என மிரட்டுவோர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள்.

உள்ளிருப்பு போராட்டம் நடத்தி அதிமுகவை காப்பாற்றி, ஜெயலலிதா வழியில் ஆட்சியை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
ஜெ. ஆட்சியை கவிழ்க்க நினைப்போருக்கு தக்கபாடம் புகட்டுவோம். சசிகலா குடும்பம் அதிமுகவுக்கு பெரும் அச்சுறுத்தல் என்று பேசினார், வளர்மதி.

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு, எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் போலவே வளர்மதியும், சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தார். சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு பெங்களூர் சிறை வரை சென்று போலீசாரால் விரட்டியடிக்கப்பட்டார். பின்னர் எடப்பாடி அணியில் இணைந்து கொண்டார். இப்போது, இவ்வாறு பேசியுள்ளது கவனிக்கத்தக்கது.

ஆட்சியை கலைக்கவும் தயார் என தினகரன் நேற்று பேட்டியளித்த நிலையில் வளர்மதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ex Minister Valarmathi says, they who are saying the gvt going to toppled were given ill treatment to Jayalalitha.
Please Wait while comments are loading...