அடுத்தடுத்து கைது.. அத்தனையும் அரசு போடும் பொய் வழக்கு.. அசராத திருமுருகன் காந்தி
தன் மீது தமிழக அரசு அடுத்தடுத்து பொய் வழக்கு போடுவதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: முள்ளிவாய்க்காலில் மாண்ட ஈழத்தமிழர்களுக்கு மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முயன்ற திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவரை உடனடியாக விடுதலை செய்யாத போலீசார் அவர் மீது குண்டர் சட்டத்தை ஏவியது. இது போதாது என்று திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஈழத்தமிழர்கள் ராணுவத்தினரால் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் மே மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது.

ஆண்டு தோறும் அஞ்சலி
உயிரிழந்த தமிழர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக மே 17 இயக்கத்தினரும், தமிழ் அமைப்புகளும் சென்னை மெரினாவில் ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதே போன்று இந்த ஆண்டும் ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

புழல் சிறை
இதற்கு போலீசார் தடை விதித்தனர். மே 21-ஆம் தேதி தடையை மீறி அஞ்சலி செலுத்த திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மெரினாவிற்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 17 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம்
இதனிடையே, திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இது போதாதென்று நேற்று முன் தினம் காவிரி பிரச்சினையின் போது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு போடப்பட்டது.

மீண்டும் கைது
கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து வள்ளுவர் கோட்டம் அருகே திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதொடர்பாக நுங்கம்பாக்கத்தில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு திருமுருகன் காந்தியை மீண்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பொய் வழக்கு
இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக திருமுருகன் காந்தியை போலீசார் அழைத்து வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் "தமிழக அரசு அடுத்தடுத்து பொய் வழக்கு போடுகிறது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications