காதலனுடன் போக விரும்பிய 8ம் வகுப்பு மாணவியை கத்தியால் சரமாரியாகக் குத்திய தந்தை
கோவை: காதலனுடன் போக விரும்பிய 14 வயது மகளை கத்தியால் சரமாரியாகக் குத்திய தந்தையை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை அருகிலுள்ள மருதமலை பகுதியை சேர்ந்த 40 வயது கூலித் தொழிலாளி தனராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். அவர்களில் கடைசி மகள், தொண்டாமுத்தூரிலுள்ள தனியார் விடுதியில் தங்கி, அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், அச்சிறுமிக்கு அதே பகுதியில் தனியார் நூல் மில்லில் பணியாற்றும் கடலூரைச் சேர்ந்த இளைஞருடன் காதல் ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் காதலருடன் வெளியூர் சென்றுள்ளார் அம்மாணவி.
மாணவியைக் காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் காதலருடன் மாணவி பேருந்துக்காக காத்திருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து மாணவியை மீட்ட போலீசார், அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். ஆனால், மாணவியின் காதலர் தப்பி விட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தனது மூத்த மகள் வீட்டுக்கு, மாணவியை அழைத்து சென்றுள்ளார் அவரது தந்தை. அப்போது படிப்பில் கவனம் செலுத்துமாறு மகளுக்கு அவர் அறிவுரை கூறியுள்ளார்.
ஆனால், அதற்கு மறுப்புத் தெரிவித்த மாணவி, தன்னை காதலனுடன் சேர்த்து வைக்குமாறு அடம் பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை, அருகில் கிடந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தியுள்ளார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவியின் தந்தையைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications