நண்பனின் ஆசைக்கு இணங்காததால் கொலை செய்தோம்.. சென்னை இளம் பெண் கொலை வழக்கில் காதலன் பரபர வாக்குமூலம்!
மயிலாப்பூர் லாட்ஜில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். நண்பரின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் காதலனே அவரை கொன்றது அம்பலமாகியுள்ளது.
சென்னை : சென்னை, மயிலாப்பூர் லாட்ஜில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். நண்பரின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் காதலனே அவரை கொன்றது அம்பலமாகியுள்ளது.
மயிலாப்பூரைச் சேர்ந்த எத்திராஜ் என்பவரின் மகள் நிவேதா. பட்டதாரியான இவர் கடந்த 14ம் தேதி மாயமானார்.
இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் மயிலாப்பூரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் பூட்டிய அறைக்குள் இளம் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

லாட்ஜ் அறையில் சடலமாக நிவேதா
இதையடுத்து அந்த லாட்ஜ்க்கு சென்ற போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றினர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மாயமான நிவேதா என தெரியவந்தது.

உடலில் நகக்கீரல்கள்
நிவேதாவின் உடலில் நகக்கீரல்களும் அவரது கழுத்தை நெறித்துக் கொன்ற அடையாளங்களும் இருந்தது. அவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா அவருடன் அறையில் தங்கியது யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

போலீசார் விசாரணை
அப்போது கேரளாவைச் சேர்ந்த ஹரிஷ் என்ற நண்பருக்காக நிவோ லாட்ஜில் ரூம் புக் செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து லாட்ஜில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்தனர்.

செல்போன் எண் கண்டுபிடிப்பு
மேலும் நிவேதாவின் போனுக்கு ஹரிஷ் என்ற பெயரில் அடிக்கடி அழைப்பு வந்ததிருந்ததை கண்டுபிடித்தனர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அந்த எண்ணை ஆய்வு செய்த போலீசார் சம்வத்துக்கு 3 நாட்களுக்கு முன்பு அந்த எண் கேரளாவில் இருந்ததும், சம்பவத்தன்று அந்த எண் சென்னை மயிலாப்பூரில் இருந்ததும் தெரியவந்தது.

கொலையாளியை நெருங்கிய போலீசார்
மேலும் அந்த எண் மதுரையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பருடையது என்பதை கண்டுபிடித்த போலீசார், அவர்தான் நிவேதாவை கொலை செய்திருக்க வேண்டும் என சந்தேகித்தனர்.

தடைப்பட்ட விசாரணை
இதைடுத்து தனிப்படை போலீசார் கொலையாளியைப் பிடிக்க மதுரை புறப்பட்டனர். ஆனால் அந்த எண் திடீரென சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் விசாரணை தடைப்பட்டது.

மயிலாப்பூரில் சிக்கிய கொலையாளி
இந்நிலையில் அந்த எண் நேற்று சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது. மேலும் மயிலாப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருப்பதாகவும் காண்பித்தது. இதையடுத்து மயிலாப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ஹரிஷை சுற்றி வளைத்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

பழக்கம் ஏற்பட்டது எப்போது?
அதாவது ஹரீஷின் உண்மையான பெயர் சுரேஷ்குமார். இவர் சென்னையில் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் நிவேதாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பொய்யான பெயர்
பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அப்போதும் சுரேஷ்குமார் தனது உண்மையான பெயரை கூறாமல் ஹரிஷ் என்றே கூறியுள்ளார். மேலும் மதுரையைச் சேர்ந்த சுரேஷ் குமார் தனது சொந்த ஊர் கேரளா என பொய் கூறியுள்ளார்.

சென்னை வருகை
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் வேலை கிடைத்ததால் அங்கு சென்ற சுரேஷ்குமார் கடந்த 14ஆம் தேதி நிவேதாவை சந்திக்க தனது நண்பர் சுபாஷுடன் மயிலாப்பூர் வந்துள்ளார்.

ரூம் புக் செய்த நிவேதா
இதற்காக நிவேதாவே சுரேஷ்குமாருக்கு லாட்ஜில் ரூம் புக் செய்துள்ளார். பின்னர் லாட்ஜ் அறையில் நிவேதாவை சந்தித்த சுரேஷ்குமார் அவருடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். பின்னர் அவரது நண்பர் சுபாஷை அறைக்கு அழைத்த சுரேஷ்குமார், நிவேதாவை நண்பரின் ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார்.

கொலையான நிவேதா
இதற்கு நிவேதா மறுத்து கூச்சலிடவே அவரது வாயை பொத்தி கழுத்தை நெரித்துள்ளனர். இதில் நிவேதா இறக்கவே இருவரும் அறையை பூட்டிவிட்டு அவசரஅவசரமாக வெளியேறியுள்ளனர்.

மயிலாப்பூரிலேயே சுற்றிய கொலையாளிகள்
பின்னர் மயிலாப்பூர் பகுதியில் சுற்றிக்கொண்டு நடப்பதை அவர்கள் நோட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சுபாஷ் தலைமறைவாக சுரேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தப்பியோடி தலைமறைவாக உள்ள சுபாஷை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications