கூகுளையும் கரைய வைத்த மாமனிதர்- முகப்புப் பக்கத்தில் கருப்பு ரிப்பன் கட்டி அஞ்சலி!
சென்னை: மறைந்தும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வாழும் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாமிற்கு உலகின் தலைசிறந்த தேடல் பொறியான கூகுளும் அஞ்சலி செலுத்தி வருகின்றது.
மேதகு மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள், நேற்று முன் தினம் தனக்கு மிகவும் பிடித்த மாணவர்களுடன், ஐஐஎம் கல்வி நிறுவனம் மேகாலயாவில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து மாரடைப்பால் காலமானார்.

உலகம் முழுவதும் அனைவரது உள்ளங்களிலும் நீங்காமல் நிறைந்து வியாபித்தவராய் திகழும் அப்துல் கலாமிற்கு உலகத் தலைவர்களும், இந்தியத் தலைவர்களும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மாணவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில், அவரது மாண்பு எத்தகையது என்பதற்கு சான்றாக உலகில் அனைவராலும் உபயோகிக்கப்படும் முதன்மையான சர்ச் எஞ்சினான கூகுளும் "கருப்பு ரிப்பன்" மூலமாக தன்னுடைய அஞ்சலியை செலுத்தி வருகின்றது.
கூகுளின் முதன்மை பக்கத்தின் கீழாக அமைந்துள்ள அந்த கருப்பு ரிப்பன் "டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவாக" என்ற வாக்கியத்தை ஆங்கிலத்தில் சுட்டிக் காட்டுகின்றது. மக்கள் மனதிலும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் நீங்க இடம் பிடித்துள்ள அம்மாமனிதர் கலாம் மகாத்மாவிற்கு அடுத்தபடியான இடத்தை வரலாற்றின் பக்கங்களில் பெற்றுள்ளார் என்றால் மிகையில்லை. அதற்கு இந்த கூகுள் பக்கமே சாட்சி!
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications