குரோம்பேட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே தீப்பிடித்துக் கொண்ட அரசு பஸ்... பயணிகள் தப்பினர்
சென்னை: சென்னை குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே அரசுப் பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. துரிதகதியில் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இன்று காலை பூந்தமல்லியில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஒரு அரசு நகரப் பேருந்து கோவளம் நோக்கிக் கிளம்பியது. குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே இந்தப் பேருந்து வந்தபோது என்ஜின் பகுதியிலிருந்து கரும்புகை கிளம்பியது.
இதைப் பார்த்த டிரைவர் சிவா பேருந்தை நிறுத்தி விட்டார். பயணிகளும் வேகமாக கீழே இறங்கி விட்டனர். தாம்பரம் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் பறந்தது. அவர்களும் படு வேகமாக விரைந்து வந்தனர். வந்த வேகத்தில் தீயை அணைத்து விட்டனர்.
அதிர்ஷ்டவசமாக தீ டீசல் டேங்க் வரை பரவாமல் தடுக்கப்பட்டு விட்டது. இல்லாவிட்டால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும். இந்த விபத்தில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை.
என்ஜினில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications