மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் கோரும் ஆம் ஆத்மி கட்சி
சென்னை: தமிழகத்தில் மழையால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சத்தை நிவாரணத்தொகையாக உடனடியாத தமிழக அரசு வழங்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் கடலூர், நெய்வேலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விளை நிலங்களில் சூழ்ந்துள்ள மழை நீர், நெற்பயிர் உள்ளிட்டவற்றுக்கு முழுச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மழைக்கு இதுவரை கிட்டதட்ட 150 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பொருள்களை அளிப்பதிலும் நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 5 ஆயிரம் கிலோ அரிசி, கோதுமை, ரொட்டி, உடைகள், மருந்துப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கட்சியினரால் வழங்கப்பட்டுள்ளன.
மழையால் பலியான குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சத்தையும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 25 ஆயிரத்தையும் உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும், வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications