For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடி அடின்னு அடிக்கிறாங்க.. மனைவிகள் மீது சரமாரியாக புகார் கூறும் சென்னை ஆண்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை காவல்துறையினர் திணறிப் போய் உள்ளனர். காரணம், மனைவி கொடுமை என்று கூறி புகாருடன் வரும் ஆண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்.

இந்த ஆண்டு இதுவரை மட்டும் 5000 புகார்கள் வந்து குவிந்துள்ளனவாம்.

மனைவி அடிக்கிறார், கோபித்துக் கொண்டு போய் விட்டார், திட்டுகிறார், சந்தேகப்படுகிறார், கொடுமைப்படுத்துகிறார் என்று பலவிதமான புகார்களுடன் ஆண்கள் காவல் நிலையத்தை நாடும் போக்கு அதிகரித்து வருகிறதாம்.

என்னா அடி...

என்னா அடி...

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர். அவரது மனைவி நன்றாகத்தான் இருந்தாராம். ஆனால் திடீரென தொழில் படுத்து நஷ்டத்தை சந்தித்த பின்னர் மனைவி கொடுமை தாங்க முடியவி்ல்லையாம். தினசரி தன்னை திட்டி அடிப்பதாக அவர் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு நிவாரணத்திற்காக காத்துள்ளார்.

ஆங்காங்கே சர வெடி

ஆங்காங்கே சர வெடி

இதுபோல சென்னையில் பல காவல் நிலையங்களிலும் மனைவியர் அடிப்பதாக கூறி புகார் கொடுத்துள்ள கணவர்கள் எண்ணிக்கை நிறையவே இருக்கிறதாம்.

5000 புகாரில் 400 விவாகரத்து

5000 புகாரில் 400 விவாகரத்து

இதுவரை இந்த ஆண்டு 5000 புகார்கள் வந்துள்ளனவாம். அதில் 400 பேர் விவாகரத்து வரை போய் விட்டார்களாம்.

மும்பை பெண்கள் பரவாயில்லையே...

மும்பை பெண்கள் பரவாயில்லையே...

அதேசமயம், மும்பையில் நிலைமை சற்று கலவரமாக இல்லை என்று தெரிகிறது. அங்கு இதுவரை 2000 ஆண்கள்தான், மனைவி கொடுமை தொடர்பாக புகார் கொடுத்துள்ளனராம்.

ஈகோ மோதல்.. பாலியல் சித்திரவதை

ஈகோ மோதல்.. பாலியல் சித்திரவதை

ஈகோ மோதல் முதல் பாலியல் சித்திரவதை வரை பல தரப்பட்ட புகார்களுடன் ஆண்கள் வருகிறார்களாம்.

30 சதவீதம் ஈகோ மோதல்தான்

30 சதவீதம் ஈகோ மோதல்தான்

30 சதவீத புருஷன் பொண்டாட்டி மோதல்களுக்கு ஈகோ மோதல்தான் காரணமாக இருக்கிறதாம். யார் பெரியவர், நீயா நானா என்று அடித்துக் கொள்கின்றனர் இவர்கள்.

உங்க அம்மாவை முதல்ல துரத்துங்க

உங்க அம்மாவை முதல்ல துரத்துங்க

20 சதவீத பெண்கள், தங்களது கணவரின் குடும்பத்தினர் குறிப்பாக பெற்றோர், கூடவே தங்குவதை எதிர்த்து கணவர்களுடன் மல்லுக்கட்டுகிறார்களாம்.

20 சதவீதம் பேருக்கு அதில் திருப்தியில்லை

20 சதவீதம் பேருக்கு அதில் திருப்தியில்லை

20 சதவீதம் பெண்கள் தங்களது கணவர் தனக்கு படுக்கையில் திருப்தி தருவதில்லை. அவருடன் வாழ்வது நரகமாக உள்ளது என்று கூறி ணவர்களுடன் மோதலில் ஈடுபடுகிறார்களாம். இப்படிப்பட்ட பெண்களில் பலர் கள்ளக்காதலில் ஈடுபடுவதாக கணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொய் பேசுகிறார்கள்

பொய் பேசுகிறார்கள்

10 சதவீத ஆண்கள், தங்களது மனைவிகள், போலீஸ் நிலையத்தில் தங்களைப் பற்றி பொய்யான புகார்களைக் கூறி தேவையில்லாமல் டென்ஷன் செய்வதாக கூறியுள்ளனர்.

அடி வாங்கியோர் எண்ணிக்கை 500

அடி வாங்கியோர் எண்ணிக்கை 500

5000 புகார்களில் மனைவி அடித்ததாக கூறி புகார் கூறியவர்களின் எண்ணிக்கை 500 ஆகும்.

இப்படியெல்லாம் இருக்காங்கப்பா பெண்கள்!

இப்படியெல்லாம் இருக்காங்கப்பா பெண்கள்!

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஒரு கணவர் கொடுத்த புகாரில், நான் நைட் டூட்டிக்குப் போன பின்னர் எனது சகோதரனுடன் எனது மனைவி உறவு கொள்கிறார். இதை நான் தட்டிக் கேட்டபோது என்னை அடிக்கிறார். அவருடன் வாழ முடியாது என்று கூறியுள்ளார்.

எட்டு நிமிடத்திற்கு ஒரு தற்கொலை

எட்டு நிமிடத்திற்கு ஒரு தற்கொலை

தேசிய குற்றவியல் ஆவண புள்ளிவிவரத்தின்படி நாட்டில் எட்டு நிமிடத்திற்கு ஒரு திருமணமான ஆண் தற்கொலை செய்வதாக கூறுகிறது. திருமணத்தால் ஏற்படும் பிரச்சினை, பணப் பிரச்சினை இதற்குக் காரணமாம்.

நீண்ட நாள் சித்திரவதை தாங்க முடியாமல்

நீண்ட நாள் சித்திரவதை தாங்க முடியாமல்

பெரும்பாலான ஆண்கள் மனைவி எப்படி இருந்தாலும் சகித்துக் கொண்டு வாழத்தான் விரும்புகிறார்கள். ஆனால் கொடுமை எல்லை மீறிப் போகும்போதுதான் அவர்கள் காவல் நிலையத்தை அணுகுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்கள் தினமாமே நேத்து...!

ஆண்கள் தினமாமே நேத்து...!

நிலைமை இப்படிக் கலவரமாக இருக்கும் நிலையில் நேற்று சர்வதேச ஆண்கள் தினத்தை உலகமே கூடி கொண்டாடி குதூகளித்துள்ளது.

என்னவோ போங்கப்பா...!

English summary
While the world on Tuesday observed International Men's Day — there is such a thing, after all, "a global occasion to celebrate the positive contributions and diverse experience (sic) of being male"; ref. facebook.com/international.mens.day — a growing number of men are approaching the Association for Protection of Men with complaints about being put through the dishwasher by their wives. Chennai men appear to have it worst. The organization has received 5,000 complaints from men in the city this year. Of these cases, 400 have resulted in petitions for divorce. In Mumbai, 2,000 men complained to the organization this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X