ராமஜெயம் கொலை வழக்கு: குற்றவாளிகளை 3 மாதத்தில் கண்டறிய சி.பி.சி.ஐ.டி.க்கு கோர்ட் உத்தரவு!
மதுரை: தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு 3 மாதம் காலஅவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நேருவின் தம்பி ராமஜெயம் கொலை தமிழகத்தையே உலுக்கியது. கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் திருச்சி காவிரி ஆற்றின் கரையில் கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

ஆனால் 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் ராமஜெயத்தை கொலை செய்த குற்றவாளியை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், ராமஜெயத்தின் மனைவி லதா சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் முன்னேற்றம் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் கேள்வி எழுப்பியது.
அதற்கு பதில் அளித்த சி.பி.சி.ஐ.டிபோலீஸார் வழக்கு முக்கிய கட்டங்களை எட்டியுள்ளதாகவும், குற்றவாளிகளை பிடிப்பதற்கு கால அவகாசம் அளிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
அதைத் தொடர்ந்து வழக்கை வரும் ஜூன் மாதம் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னைஉயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications