விஷ்ணுபிரியா தற்கொலை: சி.பி.ஐ. விசாரணை குறித்துப் பரிசீலிக்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
மதுரை: விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது தொடர்பாக, டி.ஜி.பி. மற்றும் உள்துறை செயலாளர் பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணைக் கோரி சமூக சமத்துவ படை நிறுவனர் சிவகாமி, தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரணை செய்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா கடந்த 18ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். எனினும் விஷ்ணு பிரியா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் எதிர்கட்சித்தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக சமத்துவ படை நிறுவனர் சிவகாமி வலியுறுத்தி உள்ளார். விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் அவர் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவில், விஷ்ணுபிரியா தற்கொலையில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. மாநில போலீசார் மீது புகார்கள் எழுந்துள்ளதால் அவர்களை விசாரிப்பது ஏற்புடையதல்ல. எனவே அவர்களது விசாரணைக்கு தடை விதித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுதாகர், வேலுமணி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர்கள், சிபிஐ விசாரணை தொடர்பாக, டி.ஜி.பி. மற்றும் உள்துறை செயலாளர் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். தமிழக அரசு பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு மனுவை பைசல் செய்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications