பெங்களூரில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த பெண்ணின் இதயம்
சென்னை: பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம் விமானம் சென்னையில் சிகிச்சை பெரும் நோயாளிக்கு பொருத்த கொண்டுவரப்பட்டது.அடையாறில் உள்ள மருத்துவமனையில் இருதய மாற்று அறுவைசிகிச்சை நடைபெறுகிறது.
பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம் விமானம் மூலம் இன்று சென்னை கொண்டுவரப்பட்டது. பின்னர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து அடையார் மருத்துவமனைக்கு 8 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டது.

போக்குவரத்து போலீஸார் இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரிசெய்து ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பிவைத்தனர். அடையாறு மருத்துவமனை மருத்துவர்கள், இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் ஒருவருக்கு பொறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து அடையாறுக்கு 11 சிக்னல்கள் உள்ளன. பழவந்தாங்கள், சிமென்ட் ரோடு, ஆசர்கானா, கிண்டி, ஹால்டா ஜங்சன், லிட்டில் மவுண்ட், காந்தி மண்டபம், மத்திய கைலாஷ், எல்.பி. ரோடு என அனைத்து சிக்னல்களிலும் மூன்று போலீசார் வீதம் நின்று ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். பெங்களூரிலும் மருத்துவமனையில் இருந்து விமான நிலையம் செல்லும் வரையிலும், போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.
இதனிடையே இந்த நிகழ்வை படம்பிடிக்க சென்ற டிவி 9 ஒளிப்பதிவாளர் காமராஜ்க்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஒளிப்பதிவாளர் காமராஜை மருத்துவமனை பாதுகாப்பு ஊழியர்கள் தாக்கினார்களாம். கழுத்தை பிடித்து தள்ளியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications