காணாமல் போன ரூ.5 லட்சம் பணத்தை ஒப்படைத்த நேர்மைமிக்க பெண்!!
சென்னை: தமக்கு கிடைத்த ரூ.5 லட்சம் பணத்தை நேர்மையோடு ஒப்படைத்த பெண்ணை போலீஸ் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் சேக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மாள். கடந்த டிசம்பர் 29ந் தேதி சென்னை மேத்தா நகரில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்றார். அங்கு அண்ணனிடம் கொடுத்து வைத்திருந்த ரூ. 5 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு, கோயம்பேடு பஸ் நிலையம் சென்றார்.
கோயம்பேட்டில் வாங்கிய பழம், பூ ஆகியவற்றையும் பணம் இருந்த தமது பையில் வைத்திருக்கிறார் முனியம்மாள். ஆனால் பையை கீழே வைத்துவிட்டு, மீண்டும் எடுக்கும் போது, தமது பைக்கு பதிலாக அதே போன்று இருந்த மற்றொரு பையை எடுத்துக் கொண்டு முன்னியம்மாள் ஊருக்கு புறப்பட்டார்.
கோயம்பேடு பேருந்தில் ஏறும் போதுதான் தமது பைக்கு பதில் வேறு பையை எடுத்து வந்ததை கண்டுள்ளார். இதைத் தொடர்ந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் முனியம்மாள் புகார் கொடுத்தார்.
இந்நிலையில், புழுதிவாக்கத்தை சேர்ந்த கோகிலா என்ற பெண், பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமாருக்கு போன் மூலம் ஒரு தகவல் கொடுத்தார். அதில், கடந்த 29ந் தேதி அன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்ற போது, தான் கொண்டு சென்ற பை காணமால் போனதாகவும், அதற்கு பதில் வேறு பை கிடைத்ததாகவும், ஆனால், அந்த பையில் ரூ.5 லட்சம் இருந்ததாகவும் கூறினார்.
இதனையடுத்து, கோயம்பேடு காவல் நிலையத்திற்கு போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார் தகவல் கொடுத்தார். பின்னர் கோகிலாவிடம் இருந்த ரூ.5 லட்சத்தை அதன் உரிமையாளர் முனியம்மாளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். பின்னர் அந்த பணம் முனியம்மாளிடம் கொடுக்கப்பட்டது.
ரூ. 5 லட்சம் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த கோகிலாவுக்கு போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications