தென்காசி மளிகை கடை.. நேராக கல்லா பெட்டிக்கே ஷாட் ரூட் கண்டுபிடித்த களவாணி.. காலையில் ட்விஸ்ட்
தென்காசி: தென்காசி சுவாமி சன்னதி பஜாரின் கீழ்பகுதியில் உள்ள 3 மாடி கட்டிடத்தில் கயிறு கட்டி இறங்கிய கொள்ளையன், மளிகை கடையில் கதவை உடைத்து கல்லா பெட்டியில் இருந்த ரூ.1½ லட்சத்தை துணிகரமாக கொள்ளையடித்து சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அந்த மர்ம நபரின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தென்காசி அருகே நன்னகரம் மின்நகர் பகுதியைச் சேர்ந்த 52 வயதாகும் சாகுல் ஹமீது என்பவர் தென்காசி சுவாமி சன்னதி பஜாரின் கீழ்பகுதியில் உள்ள 3 மாடி கட்டிடத்தில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று இரவில் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

பின்னர் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலையில் சாகுல் ஹமீதுவின் உறவினர் ஒருவர் சாவியுடன் வந்து கடையை திறந்தார். அப்போது கடையில் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் பணம் கொள்ளை போயிருந்ததும், கடையின் 3-வது தளத்தில் இருந்த கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தென்காசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் ஜான் பீட்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மளிகை கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்தபோது, நள்ளிரவில் முகத்தை துணியால் மூடிய மர்மநபர் ஒருவர் மாடியில் இருந்து படிக்கட்டு வழியாக கடைக்குள் இறங்கி வந்திருக்கிறார். பின்னர் கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்து விட்டு, கல்லா பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையடித்து செல்வதும் பதிவாகி இருக்கிறது..
நள்ளிரவில் மளிகை கடையின் பின்புறம் உள்ள வீட்டின் மாடியில் இருந்து மர்மநபர் மளிகை கடை கட்டிடத்துக்கு தாவி குதித்து வந்திருப்பது விசாரணையில் உறுதியாகி உள்ளது... பின்னர் மாடியில் இருந்து கயிறு கட்டி இறங்கி, மளிகை கடையின் 3-வது தளத்தில் இருந்த கதவை உடைத்து உள்ளே சென்று கைவரிசை காட்டிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள். மளிகை கடையின் கல்லா பெட்டியில் ரூ.1½ லட்சம் கொள்ளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications