கிரானைட் குவாரிகளில் நரபலி: 7 பேருக்கு சம்மன்- எலும்புக்கூடுகளுக்கு சென்னையில் மரபணு பரிசோதனை
சென்னை: நரபலி புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பிஆர்பி கிரானைட் நிறுவன ஊழியர்கள் 7 பேருக்கு கீழவளவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சின்னமலம்பட்டியில் முதற்கட்டமாக தோண்டி எடுக்கப்பட 4 பேரின் எலும்புக்கூடுகளை மரபணு சோதனைக்காக சென்னைக்கு அனுப்ப மதுரை போலீசுக்கு மேலூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிரானைட் குவாரிகளில் மனநலம் பாதிக்கப்பட்டோர் நரபலி கொடுக்கப்பட்டு, மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சின்னமலம்பட்டி மணிமுத்தாறு ஓடை சுடுகாட்டு பகுதியில் புதைக்கப்பட்டதாக பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன முன்னாள் டிரைவர் சேவற்கொடியோன் புகார் தெரிவித்தார்.

இந்த புகாரின்பேரில் கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், உடல்கள் புதைக்கப்பட்டதாக சேவற்கொடியோன் அடையாளம் காட்டிய இடத்தை தோண்டி பார்க்க உத்தரவிட்டார்.
8 எலும்புக்கூடுகள்
வருவாய் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் சின்னமலம்பட்டியில் குறிப்பிட்ட இடத்தில் குழி தோண்டப்பட்டது. இந்த குழியில் இருந்து ஒரு குழந்தை உள்பட 8 பேரின் எலும்பு கூடுகள், மண்டை ஓடுகள் எடுக்கப்பட்டன. அவை அனைத்தும் மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. டி.என்.ஏ., சூப்பர் இம்போசிங் போன்ற சோதனைகளும் நடத்தப்பட உள்ளன.
விசாரணைக்கு ஆஜர்
இந்த நிலையில் நரபலி புகாரின் அடிப்படையில் பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பழனிச்சாமி, ஊழியர்கள் அய்யப்பன், ஜோதிபாசு, பரமசிவன் ஆகியோருக்கு கீழவளவு போலீசார் சம்மன் அனுப்பினர். அவர்கள் கடந்த 15, 16 மற்றும் 17ம்தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகினர். நரபலி புகார் கூறிய சேவற்கொடியோனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவர் 22ம்தேதி போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
7 பேருக்கு சம்மன்
அவர் கூறிய தகவலின் அடிப்படையில் பி.ஆர்.பி. நிறுவனங்களில் வேலை பார்த்த லோகேஷ், முருகேசன், ராஜா, தனபால், ஹனுமந்தன், பழனிவேல், முருகானந்தம் அகிய 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இவர்கள் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 5ம் தேதிக்குள் கீழவளவு போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் மரபணு சோதனை
இதனிடையே, சின்னமலம்பட்டியில் முதற்கட்டமாக தோண்டி எடுக்கப்பட 4 பேரின் எலும்புகள் மேலூர் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மரபணு சோதனைக்காக அவை அனைத்தும் சென்னைக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications