தென்காசி: கிணறு தோண்டும்போது கிடைத்த எலும்புக் குவியல்- பதற்றம்
தென்காசி: தென்காசி அருகே சுடுகாட்டுப்பகுதியில் உறைக்கிணறு தோண்டியபோது குவியல் குவியலாக எலும்புத்துண்டுகள் தென்பட்டதால் தொழிலாளர்கள் பதறியடித்து ஓடினர்.
தென்காசிஅருகேயுள்ள சுந்தரபாண்டியபுரம் கிராம ஊராட்சிக்கு சொந்தமாக உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் குடிநீருக்காக அப்பகுதியிலுள்ள சிற்றாற்றில் உறைகிணறு தோண்டியுள்ளனர்.
உறைகிணறு தோண்டிய நிலம், பலவருடங்களுக்குமுன் ஒரு பகுதி மக்கள் பயன்படுத்திவந்த சுடுகாடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலத்தில் உறைகிணறு தோண்டிய போது எலும்பு கூடுகள்,மனித எலும்புகள் ஏராளமாய் வெளியே தெரியவந்தது இதனைக்கண்ட தொழிலாளிகள் அலறியடித்து ஓடியுள்ளனர்.
இதனால் கிணறு தோண்டப்பட்ட இடத்தில் அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் கிணறு தோண்டிய நிலத்தில் இருந்து எலும்புகள் வருகின்றன. எனவே அரசு சார்பில் அந்த இடத்தில் உறைகிணறு தோண்டுவதற்கு பதிலாக வேறு இடத்தை தேர்வு செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications