நிஜத்தில் தான் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறேன்.. மிரட்டும் கமல்!!
விஸ்வரூபம் பார்ட் 3 வெளியாகுமா என்ற கேள்விக்கு, சினிமாவில் இல்லை நிஜத்தில் நான் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் மிரட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை: விஸ்வரூபம் பார்ட் 3 வெளியாகுமா என்ற கேள்விக்கு, சினிமாவில் இல்லை நிஜத்தில் நான் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் மிரட்டியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பிக்பாஸ் 2, அரசியல், விஸ்வரூபம் 2 ரிலீஸ் என படு பிசியாக உள்ளார்.
விஸ்வரூபம் 2 கடந்த 10 ஆம் தேதி வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. விஸ்வரூபம் 2 படத்தில் கமலும் ஆண்ட்ரியாவும் ராணுவ அமைப்பில் பயிற்சி பெறும் காட்சிகள் சென்னை கிண்டியில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் படமாக்கப்பட்டிருந்தது.

ஓடிஏவில் சிறப்பு காட்சி
படம் ரிலீஸ் ஆனதை தொடர்ந்து அங்கு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் கமல்ஹாசன். காட்சி முடிந்ததும் கமல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அரசியல் ரீதியாகவும் அவர் பலவற்றை பேசினார்.

மிரட்டிய கமல்
அப்போது விஸ்வரூபம் 3 வருமா? என்று கேட்டதற்கு ‘சினிமாவில் இல்லை. நிஜத்தில் தான் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறேன். இங்கு நான் பயிற்சி எடுத்த காலம் குறுகியது தான், ஆனால் கற்றுக்கொண்டது நிறைய.
இந்திய ராணுவத்தில் நாம் அதிகம் பங்கெடுக்க வேண்டும் அது என்னுடைய ஆசை. பயிற்சியின் போது இடம்பெற்ற ராணுவ அதிகாரிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

பெருமையாக உள்ளது
படத்திற்காக பலமுறை பயிற்சி எடுத்து இருந்தால் கூட இந்த அளவிற்கு படம் வந்திருக்காது. ஆனால் இங்குள்ள உண்மையான ராணுவ வீரர்கள் உடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது.

நான் சொல்ல மாட்டேன்
விஸ்வரூபம் 2 வெளியிடப்படாத மாவட்டங்களில் படம் நிச்சயமாக வெளியாகும். படத்தை தடைவிதிக்க பின்புலத்தில் இருந்து நிறைய பேர் வேலை செய்கிறார்கள் அவர்கள் யார் என்று நான் சொல்லமாட்டேன்.

எதிர்கொள்ள வேண்டும்
எனவே நிச்சயம் இது சரி செய்யப்படும். படித்த இளைஞர்கள் அதிகாரிகளாக வர வேண்டும், இதுவும் அவர்கள் கடமையென நாடு காக்கும் பணியை செய்ய முன்வர வேண்டும். ஆனால் யாரையும் கட்டாயபடுத்தக்கூடாது. படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை, எதிர்மறையாகவே பார்க்க வேண்டும், எதிர்கொள்ள வேண்டும்' இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications