சுந்தரத்துடன் வாழ கணவரை கொல்ல இரவெல்லாம் காத்திருந்தேன்... அபிராமியின் அதிரவைக்கும் வாக்குமூலம்!
சுந்தரத்துடன் வாழ கணவரை கொல்ல இரவெல்லாம் காத்திருந்தேன் என அபிராமி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சுந்தரத்துடன் நிம்மதியாக வாழ கணவரை கொல்ல இரவெல்லாம் காத்திருந்தேன் என அபிராமி தெரிவித்துள்ளார்.
கள்ளக்காதல் கண்ணை மறைத்ததால் 2 குழந்தைகளை கொன்றுள்ளார் தாய் அபிராமி. குன்றத்தூரை சேர்ந்த அபிராமிக்கு அப்பகுதியில் உள்ள பிரியாணிக் கடை ஊழியரான சுந்தரத்துடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
சுந்தரத்துடன் நிரந்தரமாக வாழ முடிவு செய்த அபிராமி, குடும்பத்தை தீர்த்துக்கட்ட முடிவுசெய்தார். அதன்படி இரண்டு குழந்தைகளை கொஞ்சமும் மனசாட்சியின்றி கொன்றுள்ளார்.

திருமணமான சுந்தரம்
இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள அபிராமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, குன்றத்தூர் கெங்கையம்மன் கோயில் தெருவில் பிரியாணி கடை ஊழியரான சுந்தரம் (25) என்பவர் மனைவி முத்துலட்சுமியுடன் வசித்து வருகிறார். அவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை.

பிரியாணி என்றால் உயிர்
எனக்கு பிரியாணி என்றால் உயிர். இதனால் அடிக்கடி ஓட்டலில் இருந்து பிரியாணி ஆர்டர் செய்து, வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுவேன்.

கூடுதலாக கொடுப்பார்
சுந்தரம் தான், வீட்டுக்கு பிரியாணியை எடுத்து வருவார். என்னிடம் இருந்த அன்பு காரணமாக ஒவ்வொரு முறையும் கூடுதலாக பிரியாணி கொண்டு வருவார்.

காமத்தில் முடிந்தது
எங்கள் நட்பு கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் ஏற்பட்டது. அது காமத்தில் முடிந்தது. அடிக்கடி இருவரும் உல்லாசம் அனுபவித்தோம்.

என்னையே சுற்றி வந்தனர்
எங்கள் நெருக்கத்தை தெரிந்த என் அப்பா, என்னை வீட்டு சிறையில் வைப்பதாக உணர்ந்தேன். கணவர் விஜய் மற்றும் குழந்தைகள் அடிக்கடி என்னை சுற்றி சுற்றியே வந்தனர்.

நிம்மதியாக வாழ முடியும்
இதுகுறித்து சுந்தரத்திடம் தெரிவித்தேன். அவர் மூன்று பேரையும் கொலை செய்தால்தான் நாம் ஜாலியாக இருக்க முடியும் என்றார். அதற்கான ஐடியா மற்றும் தூக்க மாத்திரைகளை வாங்கி தந்தார். எனவே, கடந்த 30ம் தேதி இரவு இவர்களை கொல்ல முடிவு செய்தேன்.

நுரை தள்ளிய நிலையில்
அதன்படி பாலில் 5 தூக்க மாத்திரைகளை கலந்து கணவர் மற்றும் 2 குழந்தைகளுக்கும் கொடுத்தேன். மறுநாள் அதிகாலையில் 3 பேரும் இறந்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், கணவன் மற்றும் மகன் அஜய் ஆகியோர் சாகவில்லை. ஆனால், பெண் குழந்தை கார்னிகா படுக்கையிலேயே வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தாள்.

சாமார்த்தியமாக தடுத்தேன்
வேலைக்கு போகும் முன், தன் பெண் குழந்தைக்கு முத்தம் கொடுக்க கணவர் விஜய் அவள் அறைக்கு செல்ல முயன்றபோது அதை அபிராமி தடுத்து, நீங்கள் குழந்தைக்கு முத்தம் கொடுக்க வேண்டாம் என்றேன். அதனால் விஜய் குழந்தைகளுக்கு முத்தம் கொடுக்காமல் வேலைக்கு சென்றார்.

துடிக்க துடிக்க கொன்றேன்
அவர் பின்னாலேயே சென்ற மகன் அஜய் கீழ் தளத்திற்கு சென்று ஹெல்மெட்டை கொடுத்து தந்தையை வழியனுப்பி வைத்தான். திரும்பி வந்த மகனை படுக்கை அறைக்கு அழைத்து சென்று மூக்கையும், வாயையும் பொத்தி துடி துடிக்க கொன்றேன்.

வீட்டிற்கு வரவில்லை
பின்னர் குழந்தைகளின் சடலத்தையும் படுக்கை அறையில் அருகருகே கிடத்திவிட்டு, இரவு நேரம் நெருங்கி விட்டதால் கணவரின் வருகைக்காக காத்திருந்தேன். அவரை கொலை செய்யும் முடிவில் இருந்தேன். கடந்த 31ம் தேதி மாத கடைசி நாள் என்பதால் வேலை பளு காரணமாக விஜய் வீட்டிற்கு வரவில்லை.

சுந்தரத்தின் ஐடியா
கணவர் காலையில் வந்தால் நான் சிக்கிக் கொள்வேன் என்பதால் இது குறித்து சுந்தரத்திடம் ஐடியா கேட்டேன். அவரது ஐடியாபடி கோயம்பேட்டில் இருந்து கன்னியாகுமரிக்கு பஸ் ஏறினேன். இளமை வேகத்தில் எனது காம இச்சையை தீர்த்துக்கொள்வதற்காக நான் பெற்ற குழந்தைகளை என் கைகளால் கொடூரமாக கொலை செய்து விட்டேன். இவ்வாறு அபிராமி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications