ஜெ. விடுதலையை எதிர்த்து அப்பீல் செய்கிறார் சு.சுவாமி! கர்நாடக மனுவோடு இணைக்க திட்டம்
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்ய சுப்பிரமணியன் சுவாமி முடிவு செய்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து உத்தரவிட்டது கர்நாடக ஹைகோர்ட். இதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. சில திருத்தங்கள், விவரங்களை கேட்ட சுப்ரீம்கோர்ட் பதிவாளர் அலுவலகம், அரசு தரப்பு விளக்கம் அளித்த பிறகு, அதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
இதேபோல, அன்பழகன் தரப்பு தாக்கல் செய்த மனுவும், சில குறைபாடுகள் களையப்பட்ட பிறகு ஏற்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, இவ்வார இறுதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
On Tues/ Wed I file my Petition in SC for Impleadment in the K'taka SLP against JJ's HC acquittal in the Disproportionate Assets case
— Subramanian Swamy (@Swamy39) July 19, 2015 இதனிடையே வழக்கின் மற்றொரு பார்ட்டியான, சுப்பிரமணியன்சுவாமியும், கோதாவில் குதிக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து டிவிட் ஒன்றில் அவர் கூறியுள்ளதாவது: செவ்வாய் அல்லது புதன்கிழமையில், ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்வேன். கர்நாடக அரசின் மேல்முறையீட்டுடன் இணைத்து விசாரிக்க கேட்கும்வகையில் மனு இருக்கும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications