For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வானில் பறந்த 'பலூன்': சுட்டு வீழ்த்தியது விமான படை போர் விமானம்!

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பார்மரில், 'பலூன்' போன்ற பொருள், பரபரப்பை ஏற்படுத்தியதால், விமானப் படையின் போர் விமானம் அதை சுட்டுத் தள்ளியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 67 வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. எல்லைப் பகுதியிலும் தீவிரமான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

IAF fighter shoots down suspicious object in Rajasthan

இது தொடர்பாக இந்திய விமானப் படையை சேர்ந்த அளித்துள்ள விளக்கத்தில், நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமான பலூன் போன்ற பொருள் ஒன்று பறப்பதாக ரேடார் மூலம் தெரியவந்தது. இதனை அடுத்து வினாப்படையை சேர்ந்த விமானம் ஒன்று அந்த பகுதிக்கு அனுப்பபட்டு, அந்த பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.

சுட்டு வீழ்த்தப்பட்டது ஒரு பெரிய பலூன் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக வெளியான செய்தியில் இந்திய போர் விமானத்தில் இருந்து தற்செயலாக வெடிகுண்டுகள் தரையில் விழுந்து வெடித்ததாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

English summary
A Sukhoi-30MKI fighter aircraft of the Indian Air Force on Tuesday shot down a balloon-like suspicious object in Rajasthan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X