வெயிலுக்கு நாடு முழுவதும் 130 பேர் பலி: இன்னும் 2 நாளைக்கு அனல் காற்று வீசுமாம்!: எச்சரிக்கை
சென்னை: நாடு முழுவதும் கடுமையான வெயில் நிலவுகிறது. அனல் காற்று மற்றும் வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் இதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் முதியவர் ஒருவர் வெயிலுக்கு சுருண்டு விழுந்து பலியாகியுள்ளார்.
அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம், மேற்கு வங்கம், ஒடிஷா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும், அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் இருந்த வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாடுமுழுவதும் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இன்று மழை பெய்யும், சூறைக்காற்று வீசும் என்று எச்சரித்த வானிலை ஆய்வு மையங்கள், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ள சித்திரை வீதியில், வெயில் கொடுமை தாங்காமல் முதியவர் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்தார். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு, இறந்தவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லியில் 70 பேர் பலி
நாடு முழுவதும் வெயில் கொடுமைக்கு 130 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் 70 பேர் வரை உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 106 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது.

ஒடிசா, ஆந்திராவில் பலி
இதேபோல ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் வெயில் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் 35 பேரும், ஒடிசாவில் 30 பேரும் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் வெயில்
தமிழகத்தில் வேலூர் மற்றும் திருச்சியில் மிக அதிகமாக 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. சென்னையில் 98.6 டிகிரி மற்றும் மதுரையில் 102.2 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி உள்ளது. மதுரையில் வெயில் காரணமாக முதியவர் ஒருவர் பலியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்பம் அதிகரிக்கும்
அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம், மேற்கு வங்கம், ஒடிஷா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும், அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அனல் தொடரும்
தமிழகத்தின் வெப்பநிலை குறித்து பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், ‘வலுகுறைந்த கடல்காற்று வீசுவதால்தான் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. அடுத்த 4,5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் தொடரும்' என்றார்.

அச்சம் வேண்டாம்
தமிழக கடலோர மாவட்டங்கள், இதர பகுதிகளில், 48 மணி நேரத்தில், 98.6 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி உள்ளது. அடுத்த, 48 மணி நேரத்தில், 105 டிகிரி பாரன்ஹீட் ஆக உயரும் என்பதால், வெப்பத் தாக்கம் அதிகம் ஏற்படலாம் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எனவே, சென்னையிலும், வெப்ப அலை தாக்கம் ஏற்படலாம். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் அறிவித்துள்ளார்.

வெளியே செல்லவேண்டாம்
வெப்ப அலை தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ள, பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம்; குறிப்பாக, நண்பகல், 12 மணி முதல், பிற்பகல், 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பொதுவாக, தண்ணீரை அதிகம் பருக வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
சென்னை மட்டுமின்றி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உட்பட, பல மாவட்ட ஆட்சியர் மக்களை உஷார்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகங்களே, இத்தகைய அறிவிப்பை வெளியிட்டு எச்சரித்துள்ளது, மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிவுரை
காற்றோட்டமான பருத்தி உடைகளை அணிய வேண்டும். குழந்தைகள், செல்லப் பிராணிகளை, 'பார்க்கிங்' செய்துள்ள வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம். தவிர்க்க இயலாத சூழலில், வெளியில் செல்ல நேர்ந்தால், குடிநீரை எடுத்துச் செல்வதுடன், தலை, கழுத்து, கை, கால்களை சிறிது, ஈரமான துணியால் மூடிச் செல்ல வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

பழ ஜூஸ் அருந்துங்கள்
தொப்பி, குடை எடுத்துச் செல்ல வேண்டும். களைப்பாக உணரும் பட்சத்தில், தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்
டீ , காபி பானங்களை தவிர்த்து, மோர், கஞ்சி, பழ ஜூஸ் குடியுங்கள், வெயிலால் சோர்வு, உடல் நலக்குறைவு ஏற்பட்டால், அருகில் உள்ள டாக்டரை அணுக வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications