வயல்காட்டு பொம்மை என கூறினால் செயல்காட்டும் வீரர்களாக எதிர்கட்சி மாறியிருக்க வேண்டும்: தமிழிசை
சென்னை: சட்டசபையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விருகம்பாக்கத்தில் இன்று ஒலிம்பிக் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சட்டசபை கூச்சல் நிறைந்ததாக இல்லாமல், மக்களுக்காக நடக்க வேண்டும். ஆளும் அதிமுக அரசாசானது, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சரியான வாய்ப்பு வழங்க வேண்டும்.

அதே சமயத்தில், கொடுக்கப்படும் வாய்ப்புகளை எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வயல்காட்டு பொம்மைகள் என ஆளும் கட்சி கூறியதும், செயல்காட்டும் வீரர்களாகத் தான் எதிர்கட்சி மாறியிருக்க வேண்டும்.
எதிர்கட்சி உறுப்பினர்களை வழிநடத்த வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர், வெளிநடப்பு செய்யும் தலைவராக இருக்கக் கூடாது. ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி ஆகியவை மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை!












Click it and Unblock the Notifications