திருச்செந்தூரில் சரத்குமார் மோசமான தோல்வி.. திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி
திருச்செந்தூர்: அதிமுக கூட்டணி சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சரத்குமார், 26,001 வாக்குகள் வித்தியாசத்தில், திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தோல்வியை தழுவினார்.
திருச்செந்தூரில், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், 9 மணி நிலவரப்படி, சரத்குமார், 2428 வாக்குகளை பெற்றிருந்த நிலையில், திமுகவின், அனிதா ராதாகிருஷ்ணன் 5317 வாக்குகளை பெற்றிருந்தார்.

இவர்கள் நடுவேயான வாக்கு வித்தியாசம் 2,889 என்ற அளவில் இருந்தது. இது தொடர்ந்து விரிவடைந்து கொண்டே சென்றது. மதியம் 3 மணியளவில் முழு அளவிலான ரிசல்ட் வெளியே வந்தது. அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் 26,001 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சரத்குமார் 2வது இடத்தை பிடித்தார்.
அனிதாராதாகிருஷ்ணனின் தனிப்பட்ட செல்வாக்கு மட்டுமின்றி, தென்காசி தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்றிருந்த சரத்குமார், இம்முறை தொகுதி மாறி வந்து திருச்செந்தூரில் போட்டியிட்டதும், அவரது பின்னடைவுக்கான காரணமாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது சரத்குமார் வாகனத்தில் இருந்து ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது, வெங்கடேச பண்ணையாரின் ஊருக்குள் விடாமல் சரத்குமார் விரட்டியடிக்கப்பட்டது போன்ற பல சர்ச்சைகளும் பிரசார காலத்தில் அரங்கேறின.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications