ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்கள்... மூட்டை மூட்டையாக அள்ளிச் சென்ற வருமான வரித்துறையினர்!
போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் ஜெயலலிதாவிற்கு வந்த கடிதங்களை மூட்டை மூட்டையாக அள்ளிச் சென்றனர்.
Recommended Video

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் ஜெயலலிதாவிற்கு கட்சியினர் அனுப்பிய கடிதங்களை மூட்டை மூட்டையாக அள்ளிச் சென்றுள்ளனர்.
ஜெயலலிதாவிற்கு எந்த அளவிற்கு கம்பீரம் இருக்குமோ அந்த அளவிற்கு போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்திற்கும் கம்பீரம் உண்டு. ஜெயலலிதாவின் இரும்புக் கோட்டையாக இருந்த இந்த வீட்டிற்குள் 21 ஆண்டிற்குப் பிறகு வருமான வரித்துறையினர் சென்றுள்ளனர்.
அதிகார மையங்களாக இருந்த ஜெயலலிதாவும் உயிருடன் இல்லை, இரண்டாவது அதிகார மையமான சசிகலாவும் சிறையில் இருக்கிறார். இத்தகைய சூழலில் தான் வருமான வரித்துறையினர் வேதா இல்லத்தில் நேற்று திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

போயஸ் கார்டனில் சோதனை
மாலை 4.30 மணிக்கெல்லாம் அதிகாரிகள் உள்ளே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது, ஆனால் மீடியாக்களின் வெளிச்சத்திற்கு ரெய்டு நள்ளிரவில் தான் வந்தது. மாலை 4.30 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை அதிகாரிகளின் சோதனை நீடித்திருக்கிறது.

தோண்டித் துருவிய அதிகாரிகள்
இளவரசியின் மகள் ஷகீலா முன்னிலையில் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன், சசிகலா அறைகளை வருமான வரித்துறையினர் சல்லடை போட்டு சளித்துள்ளனர். இந்த சோதனையின் போது ஜெயலலிதாவிற்கு வந்த கடிதங்களை சசிகலா அறையில் இருந்து வருமான வரி அதிகாரிகள் அள்ளிச் சென்றுள்ளனர். சுமார் 5க்கும் மேற்பட்ட மூட்டைகளில் இந்த கடிதங்களை வருமான வரித்துறையினர் அள்ளிச் சென்றுள்ளனர்.

கட்சியினர் அனுப்பிய கடிதங்கள்
ஜெயலலிதாவின் கடித போக்குவரத்தை சசிகலா தான் படித்து அவரிடம் சொல்லி வந்ததாக சசிகலாவே தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். இந்நிலையில் கட்சியினர் தங்களின் தலைவருக்கு அனுப்பிய கடிதங்களை ஏன் அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கட்சியை பலவீனம் செய்வதா திட்டம்
வருமான வரித்துறையினர் ஆவணங்களை சரி பார்க்க வேண்டுமே தவிர ஜெயலலிதாவிற்கு வந்த கடிதங்களை ஏன் சரிபார்க்கின்றனர். இது கட்சி சார்ந்த செயல்பாடுகள் குறித்து தொண்டர்கள், பிரமுகர்கள் எழுதியிருக்கக்கூடும் நிலையில் கட்சியை பலவீனம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக மத்திய அரசு வருமான வரி அதிகாரிகளை வைத்து இந்த கடிதங்களை அள்ளிச் சென்றுள்ளனரா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications