#rakshabandhan இந்தியர்களின் மனங்களை பதக்கத்தால் நிரப்பிய பாசக்கார தங்கச்சி... சாக்ஷி மாலிக்!
சென்னை: இன்று ரக்ஷா பந்தன் எனப்படும் ராக்கி பண்டிகை வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தற்போது அங்கு இரட்டிப்பு சந்தோஷத்துடன் கொண்டாடப்படுகிறது.. காரணம், சாக்ஷி மாலிக்கின் வெண்கல வெற்றி!
ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் கூட கிடைக்காமல் திக்கித் திணறி வந்த நிலையில் இன்று இந்தியாவுக்கு அதிகாலையிலேயே அளப்பறிய சந்தோஷத்தைக் கொடுத்து விட்டார் சாக்ஷி மாலிக்.
சோர்ந்து போய்க் கிடந்த இந்திய ரசிகர்கள் இப்போது சாக்ஷியை தங்களது சொந்த சகோதரியாக பாவித்துத் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர். காரணம் இன்று ரக்ஷா பந்தன் என்பதால்.
|
மோடிய குஷியாயிட்டாரு
பிரதமர் மோடிதான் முதன் முதலாக ரக்ஷா பந்தனைக் குறிப்பிட்டு சாக்ஷியை வாழ்த்தி மகிழ்ந்தார். ரக்ஷா பந்தன் கொண்டாடப்படும் இந்த நல்ல நாளில் நமக்குப் பெருமை தேடிக் கொடுத்து விட்டார் இந்தியாவின் மகளான சாக்ஷி என்று பெருமிதம் வெளியிட்டிருந்தார் மோடி.

அண்ணன்களின் கொண்டாட்டம்
சமூக வலைதளங்களிலும் ரக்ஷா பந்தனையும், சாக்ஷியின் வெற்றியையும் இணைத்து பலரும் சந்தோஷமாக அதைக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஒவ்வொரு இந்திய ஆணையும் பெருமைப்படுத்தி விட்டார் சாக்ஷி என்றும் பலர் பெருமை வெளியிட்டுள்ளனர்.

பொருத்தமான வெற்றி
ரக்ஷா பந்தன் பண்டிகையன்று சாக்ஷி பெற்றுள்ள இந்த வெற்றி மிகப் பொருத்தமானது. இந்தியாவின் மகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களின் சகோதரியும் சாக்ஷிதான் என்றும் பலர் புகழாரம் சூட்டியுள்ளனர்.

போராடி வந்த வெற்றி
இந்தியாவுக்கு இது பெரும் போராட்டத்திற்குப் பின்னர் கிடைத்த பெரிய வெற்றியாகும். ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி 11 நாட்களாகியும் பதக்கம் கிடைக்காமல் அல்லாடி வந்த நிலையில் இன்று அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார் சாக்ஷி.
உண்மையில் ராக்கியன்று சாக்ஷி பெற்ற இந்த வெற்றியை அத்தனை இந்திய ஆண்களும் தங்களது சொந்த தங்கையே வென்ற உணர்வுடன்தான் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பதில் சந்தேகமே இல்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications